நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.
இந்த படத்தில் பலரும் பிரதானமாக வைத்த குற்றச்சாட்டு என்னவென்றால் படத்தின் இரண்டாம் பாதியில் படுமோசமாக இருக்கிறது என்பது தான். நிஜமாகவே லோகேஷ் கனகராஜ் தான் இரண்டாம் பாதியை இயக்கினாரா..? என்ற கேள்வி எழுந்தது.
படம் வெளியாகும் முன்பே கடைசி 20 நிமிடங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக படத்திலிருந்து வெளியேறிவிட்டார். அந்த 20 நிமிடத்தை இயக்குனர் ரத்தினகுமார் தான் இயக்கியிருந்தார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகி.
இப்படியான சர்ச்சைகளுக்கு மத்தியில் லியோ படத்தின் இரண்டாம் பாதி ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. குறிப்பாக கிறிஸ்துவ மதத்தில் இல்லாத ஜாதகம், பரிகாரம் போன்றவற்றை படத்தில் காட்டியது மிகப்பெரிய தவறு என சமீபத்திய மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார் நடிகர் விஜயின் தந்தை எஸ் ஏ சி.
அவர் கூறியதாவது, படம் வெளியாவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பே முழு படத்தையும் நான் பார்த்து விட்டேன். படத்தை முழுமையாக பார்த்துவிட்டு படத்தின் முதல் பாதி அருமையாக இருக்கிறது ஒரு படம் என்றால் எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் தான் உதாரணம் என இயக்குனரை பாராட்டினேன்.
அவரும் கேட்டுக் கொண்டிருந்தார். அதன் பிறகு இரண்டாம் பாதையை சரியாக இல்லை மிக மோசமாக இருக்கிறது என கூறினேன். அப்போது சார் நான் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் பிறகு உங்களை அழைக்கிறேன் என கூறினார்.
நான் பாராட்டும் போது சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என்று கூறாதவர் நான் படத்தை பற்றி எதிர்மறையான சில கருத்துக்களை பதிவு செய்ததும் நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் பிறகு அழைக்கிறேன் என்று கூறிய போனை வைத்து விட்டார். அதன் பிறகு அழைக்கவே இல்லை.
நான் சொன்ன குறையை ஐந்து நாட்களில் கண்டிப்பாக சரி செய்து இருக்க முடியும். ஆனால், அதை எதையும் செய்யாமல் அப்படியே படத்தை வெளியிட்டார்கள். சொன்னது போலவே நான் சொன்னதைத்தான் அனைவரும் கழுவி ஊத்தினார்கள். இதனால் தான் லியோ படம் பிளாப் ஆனது.
SAC லியோ வரதுக்கு முன்னாடியே வார்னிங் கொடுத்துருக்காரு. 👌👌
அப்பா பேச்ச கேட்டிருந்தா ஹிட் குடுத்துருக்கலாமோ என்னமோ. 😒pic.twitter.com/01i2Rb7hsV
— –சிவா– (@KSivaSivaK) January 27, 2024
கிறிஸ்துவ மதத்தில் ஜாதகம், பரிகாரம் தன்னுடைய மகனையே நரபலி கொடுக்கும் அளவுக்கு மூடநம்பிக்கைகள் எல்லாம் கிடையாது. இது மிகவும் அன்னியமாக எனக்கு தோன்றியது. இதைத்தான் நான் இயக்குனரிடம் கூறினேன். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை என சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் ஓப்பனாக பேசி இருக்கிறார் இயக்குனர் எஸ் எஸ் சி.