பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த பூனம் பாஜ்வா தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். 2005 ஆம் ஆண்டில் தெலுங்கில் வெளி வந்த திரைப்படத்தில் நடித்த இவர் 2008 ஆம் ஆண்டில் ஹரி இயக்கத்தில் வெளி வந்த சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.
பூனம் திரைப்படங்களில் ஹீரோயினியாக நடிப்பதோடு மட்டுமல்லாமல் துணை கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தவர். இதனை அடுத்து இவர் தமிழில் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, எதிரி எண் 3, ஆம்பள, ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இதில் ஆம்பள படத்தில் இவர் கஷ்டம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை பூனம் பாஜ்வா..
தமிழில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அதிகளவு ரசிகைகள் வட்டாரம் உள்ளது. குறிப்பாக துரோகி, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை போன்ற படங்களில் இவரது நடிப்பு பாராட்டும் விதத்தில் இருந்தது.
அதுமட்டுமல்லாமல் சுந்தர் சி யின் படமான முத்தின கத்திரிக்காய் மற்றும் அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்த இவருக்கு புதுமுக நடிகைகளின் வரத்து அதிகரித்ததை அடுத்து திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு குறைந்தது. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டில் ஜி.வி பிரகாஷ் உடன் இணைந்து குப்பத்து ராஜா என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை.
உடம்பு பெருக்க காரணம்..
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கில்மா உணர்வில் தள்ளி விடுவார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் எடை அதிகரித்து இருந்தது. அப்படி உடல் எடை பெருக்க என்ன காரணம் என்பதை நடிகை பூனம் பாஜ்வா சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோவில் இவர் சொன்ன கருத்தை கேட்டீர்கள் என்றால் தூக்கி வாரி போடும். பொதுவாக அனைவரும் காலை எழுந்ததுமே தேநீர் கொடுப்பதையோ அல்லது காபி குடிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த விஷயமானது நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது கிடையாது. அப்போதைக்கு தேவையான புத்துணர்வை இந்த இரண்டு பானங்கள் கொடுத்தாலும் நாள் முழுவதும் உங்களுக்கு சோர்வான உணர்வை கொடுக்கும்.
இதனால் அடிக்கடி காபி மற்றும் தேநீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கி விடுவதோடு மட்டுமல்லாமல் உடல் சம்பந்தப்பட்ட அஜீரணக் கோளாறு, வாயு தொல்லை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு வழி செய்யும்.
மேலும் இதனால் உடல் எடை அதிகரிக்க கூடிய பிரச்சனைகள் உண்டாக அதிக வாய்ப்புகள் உள்ளது. நான் ஒரு கட்டத்தில் காலை எழுந்ததும் இரண்டு மக் அளவு தேநீர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இரண்டு மக் என்றால் தாராளமாக அதை 750 மில்லி அளவு இருக்கும் என்றால் பாருங்களேன். என்னுடைய உடல் எப்படி பெருந்து போயிருக்கிறது என்று உங்களுக்கு புகைப்படத்தை பார்த்தபோது புரிந்திருக்கும்.
இதனை அடுத்து காலை எழுந்ததும் காபி, டீ குடிப்பதை தவிர்த்து விட்டு ஆரோக்கியமான உணவு ஏதாவது எடுத்துக் கொள்ளுங்கள். அது உட்கொண்ட பிறகு 10 நிமிடம் அல்லது அரை மணி நேரம் கழித்து தேநீர் அருந்துவதால் உடலுக்கு நன்மை கிடைக்கும்.
அது மட்டுமல்லாமல் தேநீர் அல்லது காபி குடிப்பதை தவிர்ப்பது உங்களுடைய உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வையும், ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் என்று பூனம் பாஜ்வா கூறி இருக்க கூடிய கருத்துக்களை கேட்ட ரசிகர்கள் அனைவரும் வருஷ கணக்காய் இதத்தான நாங்க பண்ணிக்கிட்டு இருக்கோம் என்று பதறி இருக்கிறார்கள்.