Site icon Tamizhakam

பிரேம்ஜி திருமணத்திற்கு யுவன் வராததற்கு காரணம் இதுவா..? வெடித்த சர்ச்சை..!

திரை உலகில் இசை ஜாம்பவனாக திகழும் இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் பற்றி அதிக அளவு சொல்ல தேவையில்லை. இவரும் சில திரைப்படங்களுக்கு இசை அமைத்ததோடு மட்டுமல்லாமல் சில திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் இருக்கிறார்.

இவரின் இளைய மகன் பிரேம்ஜிக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.

பிரேம்ஜியை பொருத்தவரை ஒரு பிளேபாயை போல சுற்றி தெரிந்த இவருக்கு கால் கட்டு போடப்பட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

நடிகர் பிரேம்ஜி திருமணம்..

நகைச்சுவை நடிப்பில் அசத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்திருக்கும் நடிகர் பிரேம்ஜி தனது சிறப்பான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர்.

இவர் சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் வங்கி கணக்கு ஆரம்பிக்க சென்றிருந்தார். அந்த வங்கியில் வேலை பார்த்த இந்து என்ற பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டு நாளா வட்டத்தில் அவர்கள் பழக்கம் காதலாக மலர்ந்தது.

இதனை அடுத்து 45 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த பிரேம்ஜி தற்போது தான் காதலித்து வந்த பெண்ணை பெற்றோர்கள் சம்மதத்தோடு முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.

யுவன் வராததற்கான காரணம்..

இந்த திருமணத்தில் அவரின் நண்பர்கள் மட்டுமல்லாமல் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தாலும் குறிப்பாக இவரின் பெரியப்பா மற்றும் பெரியப்பா மகன் யுவன் சங்கர் ராஜா கலந்து கொள்ளாமல் போனது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற யுவன் சங்கர் ராஜா முஸ்லிம் மதத்திற்கு மதம் மாறி ஒரு இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இவரின் தம்பி பிரேம்ஜியின் திருமணமானது முருகன் கோவிலில் நடந்ததை அடுத்து முஸ்லிம் மதத்திற்கு மாறிய யுவன் கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் தான் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற விமர்சனங்கள் வேகமாக பரவி வருகிறது.

வெடித்த சர்ச்சை..

இதனை அடுத்து மதத்தை காரணமாக வைத்து தான் யுவன் சங்கர் ராஜாவால் திருமணம் நடந்த கோயிலுக்கு செல்ல முடியவில்லை என்பது போன்ற கருத்துக்கள் பரவி வருகிறது.

எனினும் சில முக்கிய இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நடிகர்கள் பலரும் திருமணங்களுக்கு அதுவும் இந்துக்களின் புனித இடமாக கருதப்படும் கோயில்களில் நடக்கும் திருமணங்களுக்கு சென்று வந்திருக்கிறார்கள்.

இப்படி இருக்கக்கூடிய பட்சத்தில் இது போன்ற முக்கியமான விசேஷங்களுக்கு செல்ல மதம் ஒரு தடை அல்ல. மனம் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்ற ரீதியில் ரசிகர்கள் அனைவரும் பேசி வருகிறார்கள்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

Exit mobile version