உச்ச கட்ட கவர்ச்சி.. சுவற்றின் இருபக்கமும் கால்களை தொங்க விட்டு.. வேதிகா படு சூடான போஸ்..!

கோலிவுட் சினிமாவிற்கு வந்த வேகத்தில் காணாமல் போன ஒரு சில நடிகைகளில் நடிகை வேதிகா முக்கியமானவர் என்று கூறலாம். மலையாளம் தெலுங்கு தமிழ் கன்னடம என்று தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்தார் வேதிகா.

2006 ஆம் ஆண்டு தமிழில் வந்த மதராசி என்கிற திரைப்படம் மூலமாக முதன்முதலாக வேதிகா திரையில் அறிமுகமானார். அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை.

தமிழில் எண்ட்ரி:

ஆனால் 2007 இல் இவர் நடிகர் ராகவா லாரன்ஸுடன் இணைந்து நடித்த முனி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. அந்த திரைப்படம் வேதிகாவிற்கும் அதிக பட வாய்ப்புகள் பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து அந்த வருடமே இரண்டு திரைப்படங்களில் நடித்தார் வேதிகா.

2008 ஆம் ஆண்டு காளை என்கிற படத்தில் இவர் நடித்தார். காளை திரைப்படத்தில் ஒரு பாடலில் முழுக்க முழுக்க கவர்ச்சியான ஒரு நடிகையாக களமிறங்கி இருந்தார் வேதிகா.  அந்த திரைப்படத்திற்கு பிறகு மழை மழை திரைப்படத்தில் நடித்தார்.

அந்த திரைப்படமும் ஓரளவு வரவேற்பு பெற்றது. அதன் பிறகு வேதிகா நடித்த திரைப்படங்கள் பலவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. 2014ல் காவிய தலைவன் திரைப்படத்தில் சித்தார்த்தின் இரண்டாவது காதலியாக நடித்திருந்தார் வேதிகா.

மார்க்கெட் இழப்பு:

அந்த ஒரு கதாபாத்திரம் கொஞ்சம் பேசப்படும் கதாபாத்திரமாக அமைந்தது அதற்குப் பிறகு மலையாளத்தில் கசின்ஸ் என்கிற திரைப்படத்தில் நடித்த பிறகு மலையாளத்திலும் பெரிதாக வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் கன்னடத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்தார்.

இப்படி 2013ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு என்று ஒவ்வொரு மொழியிலும் மாறி மாறி படம் நடித்து வருகிறார் வேதிகா. ஏனெனில் எந்த ஒரு துறையிலும் அவருக்கு நிரந்தரமான ஒரு மார்க்கெட் இல்லை என்று கூறப்படுகிறது.

காஞ்சனா 3 வரை தமிழ் சினிமாவில் நடித்து வந்தார் வேதிகா. அதற்குப் பிறகு இன்னும் அவரது நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் வெளிவரவில்லை இதற்கு நடுவே அடிக்கடி இணையத்தில் ட்ரெண்டிங்காக இருப்பதற்காக புகைப்படங்களை வெளியிட்டு வரும் வேதிகா தற்சமயம் வெளியிட்டிருக்கும் ஒரு சில புகைப்படங்கள் அதிக வைரல் ஆகி வருகின்றன. மேலும் தமிழில் இன்னும் ஒரு சில திரைப்படங்களில் வாய்ப்பை பெற்று நடித்து வருகிறார் வேதிகா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version