காசு வாங்கிகிட்டு போக்கு காட்டிய சிம்ரனுக்கு.. தயாரிப்பாளர் சங்கம் கொடுத்த பரிசு..!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சிம்ரன் குறிப்பாக தென் இந்திய சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து இங்கு நட்சத்திர நடிகையாகவும் நம்பர் ஒன் இடத்தையும் தக்க வைத்துக்கொண்டார்.

மும்பை மகாராஷ்டிரா பகுதி சேர்ந்தவரான இவர் ஆரம்பத்தில் சில ஹிந்தி திரைப்படங்களின் நடித்து வந்தார்.

நடிகை சிம்ரன்:

அதன் பிறகு மலையாளம், தெலுங்கு தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து மிகக்குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனக்கவந்த நடிகையாக இவர் பார்க்கப்பட்டார்.

முதன் முதலில் தமிழில் ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலமாக நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இருந்தார்.

இந்த திரைப்படத்தில் விஜய் மற்றும் சிவாஜி கணேசன் உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள். 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் சிம்ரனுக்கு நல்ல அறிமுக படமாக அமைந்தது.

தொடர்ந்து நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், கண்ணெதிரே தோன்றினால், பிரியமானவளே, ஜோடி , பஞ்சதந்திரம், கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து ஸ்டார் ஹீரோயினாக இடத்தைப் பிடித்தார் நடிகை சிம்ரன்.

பல வருடத்திற்கு பிறகு ரீ என்ட்ரி:

சினிமாவில் பீக்கில் இருந்த போது கடந்த 2003 ஆம் ஆண்டு தீபக் பக்கா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை செட்டில் ஆகிவிட்டார்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். குழந்தை குடும்பத்திற்கு பிறகு பல வருடம் சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து வந்த நடிகை சிம்ரன் மீண்டும் தனது இரண்டாவது இன்னிசை துவங்க ஆரம்பித்தார்.

ரஜினிகாந்த் உடன் ஜோடி சேர்ந்து பேட்ட திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்த சிம்ரன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த அந்தகன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் மார்க்கெட் பிடித்து தொடர்ச்சியாக நடித்து வரும் நடிகை சிம்ரன் மீது தெலுங்கு சினிமா சிம்ரனுக்கு ரெட் கார்ட் கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் பணத்தை பெரும் தொகையாக வாங்கி விட்ட நடிகை சிம்ரன் அவருக்கு டேட் கொடுக்காமல் இழுத்து அடித்து வந்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் வேறு ஒரு முன்னணி நடிகரின் பட வாய்ப்பு கிடைத்ததும் அந்த படத்தில் நடிக்க சென்று விட்டாராம் நடிகை சிம்ரன்.

காசு வாங்கி டிமிக்கி கொடுத்த சிம்ரன்:

தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்ரன் மீது அந்த தயாரிப்பாளர் புகார் கொடுத்திருக்கிறார். அதன் அடிப்படையில் சிம்ரன் மீது ஆக்சன் எடுத்த தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்துள்ளது.

இனிமேல் வேற எந்த ஒரு படத்திலும் தெலுங்கு சினிமாவில் நடிக்க முடியாது என சிம்ரனுக்கு முடிவு கட்டி விட்டார்கள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிம்ரன் கிட்டதட்ட ஐந்து லட்சம் ரூபாய் அபராதமாக கட்டி அதன் பின்னர் மீண்டும் தெலுங்கு சினிமாவில் நடிக்க அனுமதி வாங்கி இருக்கிறார்.

இதனை பிரபல தயாரிப்பாளரான கே ராஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து பெரும் பரபரப்பு கிளப்பி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version