ரெட் ஜெய்ண்ட் மூவி மேக்கர்ஸ்.

தற்போதைய  தமிழக முதல்வர் திமுக தலைவர் அண்ணன் எம்.கே.ஸ்டாலினின் ஒரே மகனான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 2008 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட  இந்திய திரைப்படத் தயாரிப்பு, விநியோக நிறுவனம் தான் ரெட் ஜெய்ண்ட் மூவி மேக்கர்ஸ். இதன் முழு உரிமையும் திராவிட முற்போக்கு கூட்டமைப்புக்கு உண்டு.இதன் தலைமையகம் சென்னை ஆகும்.

ஆரம்ப காலத்தில் இயக்குனர் தாமஸ்வானானுக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையிலான ஓரு புரிந்துணர்வு இருந்தது. 

இதற்கு பிறகு 2008 ஆண்டில் தான் திரைப்பட தயாரிப்பில் இந்த நிறுவனம் அதிரடியாக இறங்கியது. அதனை அடுத்து இளைய தளபதி விஜய் கொண்டு அதே ஆண்டு இயக்குனர் தரணி இயக்கிய “குருவி” படத்தை தயாரித்து வெளியிட்டது.

அதன் பின் 2009 ல் ரெட் ஜெய்ண்ட் ஸ்டூடியோ நிதியுதவியுடன் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி நடிகர் சூர்யா நடித்த “ஆதவன்” படம் வெளி வந்து மக்கள் மத்தியில் பேசப்பட்டது.

பின்னர் பெரிய பட்ஜெட் படங்களில் பணியாற்றிய கமல்ஹாசன் வைத்து 2010 ல் “மன்மதன் அம்பு” மற்றும் 2011 ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான “ஏழாம் அறிவு” போன்ற படங்கள் இந்த கம்பெனி க்கு நல்ல லாபத்தையும், பெயரையும் பெற்றது.

விண்னைத்தாண்டி வருயாயா,  மதரசபட்டினம், ராஜேஷின் பாஸ் எங்கிற பாஸ்கரன் மற்றும் பிரபு சாலமனின் மைனா ஆகியோரின்  படங்களை 2010 இல் வெளியிட்ட இந்த நான்கு வெளியீடுகளும் மிகப்  பெரிய வெற்றியைப் பெற்றது.

இதனை தொடர்ந்து இந்த நிறுவனத்தின் உரிமை யாளாரான உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக களத்தில் இறங்கி மக்களின் மனதில் இடம் பிடித்தார்.  அதன் பின்னர் தொடர்ந்து தனது சொந்த படங்களில் தயாரித்து நடித்து வருகிறார்.

இவர் 2012 ல் இயக்குனர் எம்.ராஜேஷ் – னின் ஓரு கல் ஓரு கண்ணாடி படத்தில் நடிகை ஹன்சிகா மற்றும் நகைச்சுவை நடிகர் சந்தானத்துடன் இணைந்து இவரின் ரியல் நடிப்பை வெளிப்படுத்திய வீதத்தை யாரும் மறக்க முடியாது.

இதே ஆண்டு இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய நீர்பறவை திரைப்பட த்திற்கு பின் 2013 ல் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கிய வணக்கம் சென்னை படம் நல்ல பெயரை பெற்று தந்தது.

2014 ல் எஸ்.ஆர்.பிரபாகரனின் இது “கதிர் வேலனின் காதல்”, 2015 ல் ஜெகதீசனின் “நண்பேண்டா”, 2016 ல் திருகுமாரனின் “கேது”, I. அகமதுவின் மனிதன் படங்களை வெளியிட்டது.

மேலும் 2017-ல் எஸிஸ் – ன் “சரவணன் இருக்க பயமேன்” படத்தில் மீண்டும் உதயநிதி தனது திறமையை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருந்தார். மீண்டும் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி 2019 – ல் கண்ணே கலைமானே படத்தில் பட்டைய கிளப்பி நடித்திருப்பார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …