“காலையில் சிம்பிள் டிபன் ரெசிபி சிவப்பரிசி ரொட்டி..!” – ஈசியா இப்படி செய்யுங்க..!!

எதிர்ப்பு சக்தியை அதிக அளவு அள்ளித் தரக்கூடிய சிவப்பரிசியில் எண்ணற்ற புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதனை நீங்கள் காலை நேரத்தில் சிம்பிளாக ஒரு சிவப்பரிசி ரொட்டி செய்து சாப்பிடுவதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் உங்களுக்கு கிடைப்பதோடு சர்க்கரை நோயாளிகளுக்கு சிறப்பான உணவாக இது இருக்கும் என்று உணவில் வல்லுநர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

சிவப்பு அரிசியில் நாம் ரொட்டியை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

சிகப்பு அரிசி ரொட்டி செய்ய தேவையான பொருட்கள்

1.சிகப்பரிசி ஒரு கப்

2.பெரிய வெங்காயம் ஒன்று

3.பச்சை மிளகாய் இரண்டு

4.சீரகம் ஒரு டீஸ்பூன்

5.தேங்காய் துருவல்   அரை கப்

6.உப்பு தேவையான அளவு

7.கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி

8.தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பிறகு பச்சை மிளகாய் இரண்டாக வகுந்து கொள்ளவும். அரை கப் அளவு தேங்காயை துருவி பிரஷ் ஆக அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

இதனை அடுத்து எடுத்து வைத்திருக்கும் சிகப்பு அரிசியை நன்கு கழுவி வெயிலில் சில மணி நேரம் உலர்த்தி விட்டு இந்த அரிசியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்து வைத்திருக்கும் இந்த மாவை ஒரு பவுலில் மாற்றி வைத்துக் கொண்டு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, தேங்காய் துருவல், கொத்தமல்லி போன்றவற்றை ஒன்றாக போட்டு நன்கு கலந்து வேண்டிய அளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளுங்கள்.

பிறகு ஒரு கால் மணி நேரம் இந்த மாவை அப்படியே ஈரத்துணிகள் மூடி வைத்து விடுங்கள். இதனை அடுத்து நீங்கள் தோசை கல்லை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வட்டமாக ரொட்டியை தட்டி தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் படி சுட்டு எடுக்க வேண்டும். சூடாக இருக்கும் இந்த ரொட்டியோடு நீங்கள் தக்காளி சட்னியை தொட்டு சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …