பாக்குறதுக்கு மட்டும் தான் காமெடி பீஸ்.. ஆனால்.. நிஜத்தில் ரெடின் கிங்ஸ்லி..!

டைரக்டர் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில்தான் அறிமுகமானார் ரெடின் கிங்ஸ்லி. பாப் கட்டிங் செம்பட்டை முடியுடன், சராசரி உயரத்துக்கும் குறைவான உயரம் கொண்ட மனிதராக மாமு வேற மாதிரி ஆயிடும் என்று சவுண்டு விட்டபடி நடித்த ரெடின் கிங்ஸ்லி, முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ரெடின் கிங்ஸ்லி

அடுத்து நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்திலும், அதன்பிறகு ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்திலும் ரெடின் கிங்ஸ்லி நடித்திருந்தார். இப்போது நிறைய படங்களில் பிஸியாக நடித்து வரும் அவர், சில மாதங்களுக்கு முன்புதான், சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துக்கொண்டார்.

பொருட்காட்சி ஒப்பந்ததாரர்

சினிமாவில் காமெடி பீஸாக பலரால் பார்த்து ரசிக்கப்படும் ரெடின் கிங்ஸ்லி, உண்மையில் மிகப்பெரிய கோடீஸ்வரர், தமிழக அரசு நடத்தும் பொருட்காட்சிகளை விட, அதிக பொருட்காட்சிகளை நடத்தி, கோடிக்கணக்கில் வருமானம் பார்ப்பவர்.

இதையும் படியுங்கள்: நிஜமாவே என் மகனா..? என DNA டெஸ்ட் பண்ணேன்.. இது தான் காரணம்..? அப்பாஸ் பகீர் தகவல்..!

பொருட்காட்சி ஒப்பந்ததாரரான அவருக்கு கீழ் 300க்கும் மேற்பட்டோர் பணிசெய்கின்றனர் என்றால் பலரால் நம்ப முடியாது. ஆனால் அதுதான் உண்மை.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பொருட்காட்சிகளை நடத்தி, வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் கூட அடுத்தடுத்து போன் அழைப்புகள் வந்துக்கொண்டிருக்கும் பிஸியான ரெடின் கிங்ஸ்லி, தன்னை சாதாரணமாக தான் மற்றவர்களிடம் காட்டிக் கொள்வார்.

சமீபத்தில் சென்னையை அடுத்த தாம்பரத்தில் வெளிநாட்டில் பாலம் என்ற பெயரில் நடத்திய பொருட்காட்சியில் ஏகப்பட்ட வருமானம் பார்த்திருக்கிறார் ரெடின் கிங்ஸ்லி.

இதையும் படியுங்கள்: பெண்டு நிமித்திய லேடி.. இதுக்கு மேல தாங்காது பாடி.. தெறித்து ஓடிய ப்ரைட் நடிகர்!

அதிக லாபம் கிடைக்கும்

எந்த தொழிலை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பதில் சரியான மூளைக்காரர் என்று பெயர் வாங்கியவர் ரெடின் கிங்ஸ்லி. எப்போதும் பிஸியான நபராக இருக்கும் ரெடின் கிங்ஸ்லிக்கு வருமானத்துக்கு குறைவே இல்லை.

சொகுசு கார்

அவர் சினிமாவில் நடித்து சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லாத நிலையிலும், ஆசை காரணமாக சினிமாவில் நடிக்கிறார். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் யாருமே வைத்திருக்காத மிக உயர்தர சொகுசு கார் ரெடின் கிங்ஸ்லியிடம் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.

காமெடி பீஸ்

சினிமாவில் பாக்குறதுக்கு மட்டும் தான் காமெடி பீஸ்.. ஆனால்.. நிஜத்தில் ரெடின் கிங்ஸ்லி பெரிய தொழிலதிபர் என்று அறிந்த ரசிகர்கள் பயங்கர ஷாக்கில் உள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version