Site icon Tamizhakam

ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதாவின் மகளை பார்த்துளீர்களா..? வைரலாகும் புகைப்படம்..!

தூத்துக்குடியைச் சேர்ந்த ரெடின் கிங்ஸ்லி சினிமாவின் மீது அதிக அளவு ஆர்வம் இருந்ததின் காரணத்தால் அவள் வருவாளா என்ற படத்தில் குரூப் டான்ஸ் ஆடி இருப்பார். இந்த படத்திற்கு பிறகு திரைப்பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் சொந்தத் தொழிலை செய்து வந்தார்.

மேலும் இவர் நெல்சன் சிம்புவை வைத்து இயக்கிய வேட்டை மன்னன் திரைப்படத்தில் நடித்தார். ஆனால் இவரது போராத காலம் இடையிலேயே அந்த திரைப்படம் தடைப்பட்டு விட்டது.

இதனை அடுத்து கோலமாவு கோகிலா என்ற படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திய ரெடின், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தில் வலிச்சா சொல்ல போதும் கோமதி என்ற டயலாக்கை பேசி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத சூழ்நிலையில் நீண்ட நாட்களாக காதலித்து வந்த சங்கீதாவை திடீரென சிம்பிளான முறையில் மைசூரில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. இதை அடுத்து பல திரை பிரபலங்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

இந்நிலையில் சின்னத்திரை சீரியல் நடிகையான சங்கீதா ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவியது. அதுமட்டுமல்லாமல் இவர் 2009 ஆம் ஆண்டு கிரிஷ் என்பவரை பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் இருக்கிறார், ஆனால் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்று விட்டார்கள். இதனை அடுத்து தான் சங்கீதா, ரெடின் கிங்ஸ்லியை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

மேலும் தற்போது மைசூரில் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா இவர்களோடு ஒரு பெண் குழந்தை இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இது தான் சங்கீதாவின் மகளா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். எனினும் உண்மை நிலை என்ன என்பது தெரியவில்லை. எனவே இதற்கான பதிலை சங்கீதா அளித்தால் மட்டும்தான் உண்மை நிலை என்ன என்பது தெரியவரும்.

Exit mobile version