பல வருடங்களாகவே தமிழ் சினிமாவில் வாய்ப்புக்காக போராடி வந்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. 1998 காலம் முதலே இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிகராக வேண்டும் என்று வாய்ப்பு தேடி வந்தார்.
ஆனால் அவருக்கான வரவேற்பும் அங்கீகாரமும் மிக தாமதமாகதான் தமிழ் சினிமாவில் கிடைத்தது. ஆரம்பத்தில் தமிழ் சினிமாவிற்கு வந்தபோது நடன கலைஞராக வேண்டும் என்றுதான் சினிமாவிற்கு வந்தார் ரெடின் கிங்ஸ்லி. அதனை தொடர்ந்து 1998ல் வெளிவந்த அவள் வருவாளா திரைப்படத்தில் வரும் ருக்கு ருக்கு பாடலில் டான்சராக அறிமுகமானார் ரெடின் கிங்ஸ்லி.
ஆனால் தொடர்ந்து அவருக்கு டான்ஸராகவே நடித்துக் கொண்டிருக்க ஆர்வம் இல்லாத காரணத்தினால் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இனி நடனம் ஆடக்கூடாது என்று நடிகர் ஆவதற்கு முயற்சிகளை செய்ய தொடங்கினார்.
இயக்குனர் மூலம் வந்த வாய்ப்பு:
இந்த நிலையில்தான் இயக்குனர் நெல்சனுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இயக்குனர் நெல்சன் தன்னுடைய முதல் திரைப்படமான கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கும் பொழுது அந்த திரைப்படத்தில் டோனி என்கிற கதாபாத்திரத்தை ரெடின் கிங்ஸ்லிக்கு கொடுத்தார்.
அந்த கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதனை தொடர்ந்து எல்.கே.ஜி திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் ரெடின் கிங்ஸ்லி. இயக்குனர் நெல்சன் இயக்கிய டாக்டர் பீஸ்ட் போன்ற படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் இருந்து வந்தன.
திருமணத்துக்கு பின் சர்ச்சை:
இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு காமெடி நடிகராக மாறினார். இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு தொலைக்காட்சி நடிகையான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார் ரெடின் கிங்ஸ்லி. இவர்கள் இருவருக்குமே வயது கொஞ்சம் அதிகம் என்று கூறப்படுகிறது.
சங்கீதாவிற்கு ரெடின் கிங்ஸ்லியை விட வயது குறைவு என்று கூறப்படுகிறது. தற்சமயம் ரெடின் கிங்ஸ்லிக்கு 47 வயதாகிறது அதைவிட சங்கீதாவிற்கு கொஞ்சம் குறைவு என்று பேச்சுக்கள் இருக்கின்றன. இது குறித்து சங்கீதா கூறும்பொழுது நாங்கள் இருவரும் மனதால் மிகவும் இளமையாகதான் இருக்கிறோம்.
என்றுமே எங்களுக்கு வயதாகி விட்டது என்று நாங்கள் நினைத்ததே கிடையாது. அவரும் அப்படி என்னிடம் கேள்விகள் கேட்டதும் கிடையாது. தொடர்ந்து எப்போதும் எங்களை இளமையாக நினைத்து பயணித்து வருகிறோம்.
எப்போதாவது ஒருமுறை என்னை இதற்கு முன்பே பார்த்திருக்க வேண்டும் என்று மட்டும் சோகமாக கூறுவாரே தவிர மற்றபடி எப்போதும் நாங்கள் எங்கள் வயதைக் குறித்து கவலைப்பட்டதே கிடையாது என்று கூறுகிறார் சங்கீதா.