ரெஜினாவிற்கு திருமணம்.. மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா..?

தமிழ், தெலுங்கு, ஹிந்தி கன்னடம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடம் பிடித்துக் கொண்ட நடிகை ரெஜினா டிசம்பர் 13-ஆம் தேதி 1990 இல் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.

இதையும் படிங்க: 19 வயசுன்னு கூட பாக்காம படுக்கைக்கு அழைத்தார்.. பிக்பாஸ் நடிகை பகீர் புகார்..!

இவர் சென்னையில் இருக்கும் பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். இதனை அடுத்து குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் 9 வயதாக இருக்கும்போதே தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணி புரிந்த அனுபவம் கொண்டவர்.

நடிகை ரெஜினா..

தமிழ் திரையுலகை பொருத்த வரை நடிகை ரெஜினா கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுக நடிகையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து விட்ட இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

இதனை அடுத்து இவர் தெலுங்கில் சிவா மனசுல சுருதி என்ற தெலுங்கு படத்தில் தனது அற்புதமான நடிப்பு திறனை வெளிப்படுத்தியதை அடுத்து 2012 ஆம் ஆண்டுக்கான சைமாவின் சிறந்த அறிமுக நடிகை விருதை பெற்றவர்.

மேலும் இவர் பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படத்தில் நடித்த இந்த படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் அளவு கவனத்தை தன் பக்கம் ஈர்த்து இவருக்கு ஒரு சிறந்த இடத்தை பிடித்துக் கொடுத்தது.

அத்தோடு தேங்காய் சீனிவாசனின் பிறந்தநாள் நடிகர் யோகியோடு இணைந்து 2006 ஆம் ஆண்டு அழகிய அசுரா திரைப்படத்தில் நடித்த இவர் ஆதித் அருளோடு மாலை பொழுதின் மயக்கத்திலே படத்தில் நடித்து ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

விரைவில் திருமணமா?

மேலும் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பெரிய அளவு ரசிகர்களால் ரசிக்கப்பட்ட இவர் பிரபலம் ஆனதை அடுத்து மேலும் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் பட வாய்ப்புகள் இவருக்கு சரியான அளவு தமிழில் கிடைக்கவில்லை.

எனவே தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்திருக்கிறார். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் கருங் காப்பியம், கான்ஜுரிங் கண்ணப்பன் போன்ற படங்களில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.

தற்போது 33 வயதை எட்டிப் பிடித்திருக்கும் நடிகை ரெஜினாவின் திருமணம் குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது காட்டுதீ போல வேகமாக பரவி வருகிறது.
மாப்பிள்ளை யார் தெரியுமா?

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அட நம்ம ரெஜினாவிற்கு திருமணமா.. யார்? அந்த மாப்பிள்ளை என்று ஆவலாக காத்திருக்கக் கூடிய வேளையில் இவர் பிரபல தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது.

எனினும் இது குறித்து உறுதியான தகவல் அவர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இந்த தகவலை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் நடிகை ரெஜினாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருவதோடு மட்டுமல்லாமல் திருமணத்திற்கு பிறகும் நடிக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கமல் அப்படி பண்ணுவாருன்னு நெனைக்கல.. அஜித் மட்டும் தான் அதை செஞ்சாரு.. நடிகை கிரண் காரசாரம்..!

ஆனால் இந்த தகவல் உண்மையான தகவலா? அல்லது கிசுகிசுப்பா? என்பது இனி வரும் நாட்களில் தெரிந்துவிடும். அது வரை ரசிகர்கள் அனைவரும் இவரது அன்பான பதிலுக்காக காத்திருக்கிறார்கள். விரைவில் ரெஜினா இதற்கு பதில் அளிப்பார் என்று கூறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version