மதுபான விடுதியில் அரைகுறை ஆடையில் ரெஜினா கசாண்ட்ரா..! தீயாய் பரவும் போட்டோஸ்..!

2005 ஆம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் திரைப்படம் தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுக்கு முக்கிய திரைப்படமாக அமைந்தது. சொல்ல போனால் பல பிரபலங்களுக்கு முதல் திரைப்படமாக இந்த திரைப்படம் இருந்தது.

மணிரத்தினத்தின் உதவி இயக்குனர் தயாரித்து இயக்கிய இந்த திரைப்படம் கொஞ்சமாகதான் வரவேற்பை பெற்றது என்றாலும் அதற்குப் பிறகு அதிலிருந்து நிறைய பேர் தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை தொட்டனர்.

அப்படி அந்த திரைப்படம் மூலமாக முதன்முதலாக அறிமுகமானவர்தான் நடிகை ரெஜினா. அதற்குப் பிறகு கன்னடம், தெலுங்கு என்று சுற்றி வந்த ரெஜினாவிற்கு மீண்டும் தமிழ் சினிமாவில்தான் வாய்ப்புகள் கிடைத்தது. கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார் ரெஜினா.

திரையில் வரவேற்பு:

அதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் வர துவங்கின. அதே நேரம் தெலுங்கிலும் வாய்ப்பை பெற்றார். தொடர்ந்து தெலுங்கில் 2014 வரை நடித்து வந்த ரெஜினா 2015 ஆம் ஆண்டு தமிழில் ராஜதந்திரம் என்கிற ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்தார்.

மீண்டும் தெலுங்கில்தான் அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது 2017க்கு பிறகுதான் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் அதிகமாக வரத் துவங்கியது. இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முதல் திரைப்படமான மாநகரம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் ரெஜினா.

தொடர்ந்து சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் போன்ற தமிழ் படங்களில் நடித்து வந்தார். எப்பொழுதும் தமிழில் வாய்ப்பை பெற்ற ஒரு நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான ராக்கெட் பாய்ஸ் என்கிற வெப் சீரீஸ் அதிக வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து பட வாய்ப்பு:

கான்ஜுரிங் கண்ணப்பன் திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்பொழுது அவருக்கு பெரிதாக வரவேற்புகள் இல்லாத காரணத்தினால் சின்ன நடிகர்கள் படத்தில் கூட நடித்து வருகிறார் ரெஜினா மேலும் விடாமுயற்சி திரைப்படத்திலும் இவருக்கு ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பொதுவாகவே தமிழ் சினிமா நடிகைகள் மதுபான விடுதிகளுக்கு செல்வது என்பது சாதாரண விஷயம் தான். ஆனால் அங்கு அரைகுறை ஆடையில் சென்று இருக்கிறார் ரெஜினா. அந்த புகைப்படங்கள்தான் சமீபத்தில் அதிக ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version