டூ பீஸ் உடையில்.. பாத் டப்பில் ஆனந்த நிலைக்கு சென்ற ரெஜினா..! அடடா.. செம்ம ரிலாக்ஸ்..!

தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ரெஜினா கேசான்ரா. இவர் தமிழில் கண்ட நாள் முதல் என்கிற திரைப்படம் மூலமாக முதன்முதலாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் நிறைய வாய்ப்புகள் பெற்றார்.

அதேசமயம் தெலுங்கிலும் அறிமுகமானார் ரெஜினா. இவர் சென்னையை சேர்ந்த தமிழ் பெண் ஆவார். ஆனால் எடுத்த உடனே தமிழில் முயற்சி செய்யாமல் முதலில் தெலுங்கில்தான் முயற்சி செய்தார். இருந்தாலும் அவருக்கு தமிழ் சினிமாவில்தான் முதலில் வாய்ப்பு கிடைத்தது.

ரெஜினாவிற்கு வந்த வரவேற்பு:

கண்ட நாள் முதல் திரைப்படத்திற்கு பிறகு 2010 ஆம் ஆண்டு ஒரு கன்னட திரைப்படத்தில் நடித்தார். அதற்கு பிறகுதான் அவருக்கு தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்தார் ரெஜினா.

அவருக்கு தமிழில் அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்த திரைப்படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரெஜினா நடித்திருந்தார். அதற்கு பிறகு தான் அவருக்கு வாய்ப்புகள் என்பதே தமிழ் சினிமாவில் அதிகரிக்க துவங்கியது.

அதே சமயம் தெலுங்கு சினிமாவிலும் வளர்ச்சியை கண்டு வந்தார் ரெஜினா தமிழில் ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், மாநகரம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். லோகேஷ் கனகராஜின் முதல் திரைப்படம் மாநகரம் என்பதால் அதுவும் அவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

மார்க்கெட் இழந்த நடிகை:

தொடர்ந்து இப்பொழுதும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் ரெஜினா ஆனால் முன்பை விட இப்பொழுது அவருக்கு வாய்ப்புகள் குறைந்து உள்ளது என்று கூற வேண்டும். இறுதியாக 2021 ஆம் ஆண்டு அவரது நடிப்பில் ஐந்து திரைப்படங்கள் தமிழில் வெளியானது.

நெஞ்சம் மறப்பதில்லை, கசடதபற, சக்ரா, முகில் ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்திருந்தார். அதற்குப் பிறகு ஒவ்வொரு வருடமும் அவருக்கான வாய்ப்பு என்பது தமிழ் சினிமாவில் குறைய துவங்கியது. இருந்தாலும் வருடத்திற்கு ஒரு திரைப்படத்திலாவது ரெஜினா நடித்து வருகிறார்.

தற்சமயம் கைவசம் ஐந்து முதல் ஆறு திரைப்படங்களை வைத்திருக்கிறார் ரெஜினா. இது இல்லாமல் ஹிந்தி சீரியஸ்களிலும் இவர் நடித்து வருகிறார் ஹிந்தியில் இவர் நடித்த ராக்கெட் பாய்ஸ் சீரிஸ் அதிக வரவேற்பு பெற்றது.

அதனை தொடர்ந்து பாலிவுட்டிலும் இவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் அவர் பாத் டேப்பில் குளிக்கும் வீடியோ ஒன்று அதிக வைரலாக துவங்கியிருக்கிறது பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version