சமூக வலைதளங்களில் பெண் சுதந்திரம் குறித்தும், ஆண்களின் வக்கிர புத்திகளை குறித்தும் பெண்கள் படவாய்ப்பிற்காக அட்ஜெஸ்ட்மென்ட் செய்வது குறித்தும் பல விஷயங்களைப் பற்றி வெளிப்படையாக பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் ரேகா நாயர்.
இவர் பொதுவாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை மிகவும் ஓப்பனாக பேசுவதன் மூலம் ஒட்டுமொத்த மக்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார்.
நடிகை ரேகா நாயர்:
இதனால் அவர் அதிகம் விமர்சிக்கவும்பட்டார். இதன் மூலம் பிரபலமும் ஆனார். அந்த வகையில் தான் இவரது பிரபலத்தை வைத்து தமிழ் சினிமாவின் திரைப்பட இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் அவரது இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல்கள் திரைப்படத்தில் நடிகையாக வாய்ப்புக் கொடுத்தார்.
அந்த திரைப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்த ரேகா நாயர் எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தார் அதுமட்டுமில்லாமல் பலரது விமர்சனத்திற்கும் உள்ளாகினார்.
அவரின் நடிப்பை பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் ரேகா நாயர் அரை நிர்வாணமாக நடித்ததை பற்றி பகீர் கிளப்பும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார்.
இதனால் மிகுந்த கோபத்திற்கு உள்ளான ரேகா நாயர். விடியற்காலை நேரத்தில் வாக்கிங் செல்லும் போது எதிர்பாராத விதமாக பயில்வான் ரங்கநாதனை சந்திக்க சண்டையிட்டார்.
பயில்வான் ரங்கநாதனுக்கு அடிதடி:
அவரின் சட்டையை பிடித்து ஓங்கி அடித்து நான் எப்படி வேணாலும் நடிப்பேன் நீ யார் என்னை விமர்சனப்படுத்த? என கேள்வி கேட்டது பெரும் பரபரப்பான செய்தியாகவும் பார்க்கப்பட்டது.
இப்படியாக ரேகா நாயர் ஒட்டுமொத்த மக்களுக்கும் பிரபலமானார். முன்னதாக இவர் வம்சம், பகல் நிலவு, ஆண்டாள் அழகர், நாம் இருவர் நமக்கு இருவர், பாலகணபதி போன்ற பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார் .
இருந்தாலும் அதன் மூலம் அவர் பிரபலமாகவில்லை சர்ச்சையான கருத்துக்களை போல்டாக பேசியதன் மூலமாக தான் ரேகா நாயர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.
அதுமட்டுமில்லாமல் தன்னுடைய நெருங்கிய தோழியான விஜே சித்ராவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாகவும் அவரை திருமணம் செய்துக் கொண்ட ஹேமந்த் தான் அவரை தற்கொலை செய்து விட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.
6 மணிநேரம் அதை விடாமல் பண்ணுவேன்:
இந்நிலையில் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியிருக்கும் விஷயம். மீண்டும் சர்ச்சை கிளப்பி உள்ளது.
நான் கிட்டத்தட்ட நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுக்கோப்பாகவும் சிக்கெனவும் வைத்திருக்கிறேன்.
இப்படி கஷ்டப்பட்டு எனது உடலை வடிவாக வைத்திருக்கும் போது என்னை இவர்கள் வந்து கேட்டதும் கொடுத்து விட முடியுமா?
என்னோட உடம்புக்கு எத்தனை கோடி பணம் கொடுப்பீர்கள்?என்று கேட்டுவிட்டு .இத்தனை கோடி தான் நான் மதிப்பா என கேள்வியும் கேட்டிருந்தார் .
அத்துடன் தண்ணி ,கஞ்சா போட்டுக்கொண்டு படுக்க கூடாது என்னிடம் இதெல்லாம் வேலைக்கு ஆகாது. வாய்ப்புக்காக தன்னை கொடுத்து படங்களை நடிக்கும் நடிகைகளையும் எனக்கு நிறைய தெரியும் .
அப்படியான நடிகைகளை பார்த்து தான் எல்லோரையும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள். மட்டுமில்லாமல் படுக்கைக்கு எனக்கு கூப்பிடும் போது எனக்கு பிடித்திருந்தால் போவேன் பிடிக்கவில்லை என்றால் போக மாட்டேன்.
படுத்துட்டு 10 வருஷம் கழிச்சு கூப்பிடுறாங்க:
அதிலும் வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து விட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து அந்த இயக்குனர் தயாரிப்பாளர் மீண்டும் படுகைக்கு கூப்பிடுவது எந்த விதத்தில் நியாயம்? எனக் கோபமாக பேசி இருக்கிறார்.
ரேகா நாயர் இப்படி மறைமுகமாக சினிமா துறையில் நடக்கும் பல அம்பலமான விஷயங்களை பொதுவெளியில் போட்டு உடைத்து இருப்பதால் ரேகா நாயர் சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டு வருவதோடு பொதுமக்களையும் விழிப்பிதுங்க வைத்துள்ளார்.