என் தொடையை தொட்டால்… இந்த உறுப்பை பிடிப்பேன்.. ரேகா நாயர் ஓப்பன் டாக்..!

பிரபல சர்ச்சைக்குரிய நடிகையான ரேகா நாயர் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக நடித்ததன் மூலமாக தனது சினிமா கெரியரை ஆரம்பித்தார்.

ஆனால், அவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானது என்னவோ YouTube சேனல்களில் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வந்ததன் மூலமாகத்தான்.

ரேகா நாயர்:

பெண்களை குறித்தும், ஆண்களின் வக்கிர பார்வை குறித்தும், பெண்களின் கவர்ச்சி ஆடைகள் சுதந்திரம் உள்ளிட்டவற்றைப் பேசி ஏடாகூடமான கருத்துக்களை முன்வைத்து மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளாத பெண்மணியாக பார்க்கப்பட்டார்.

ஒரு கட்டத்தில் பெண்களே இவர்களை திட்டி தீர்க்கும் அளவுக்கு இவரது கருத்துக்கள் இருந்தது. பெண் சுதந்திரம் குறித்து மிகவும் துணிச்சலான கருத்துக்களை மேடையில் பேசி விமர்சனத்திற்கு உள்ளானார்

அது மட்டும் இல்லாமல் பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதனை நடுரோட்டில் இழுத்து அடித்ததன் மூலமாக ஒட்டுமொத்த மீடியாக்களில் சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

இவர் பிரபல இயக்குனரான பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல்கள் திரைப்படத்தில் அரை நிர்வாணம் ஆக நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

அரைநிர்வாணமாக ரேகா நாயர்:

பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய பேட்டியில் மிகவும் மோசமாக கீழ்த்தரமாக பேசி ரேகா நாயரை விமர்சித்திருந்தார்.

இதனை மனதில் வைத்துக்கொண்டு ரேகா நாயர் வாக்கிங் செல்லும்போது பயில்வான் ரங்கநாதனை எதேர்ச்சியாக பார்க்க அவரை அடித்து வெளுத்தது செய்திகளில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பெண் சுதந்திரம் குறித்து அவர் கூறிய கருத்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

ரேகா நாயர் படுமோசமாக நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டார். இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். நான் மன்சூர் அலிகான் செய்த விஷயத்திற்கும் அவரது செயலுக்கும் வக்காலத்து வாங்கவில்லை.

அது மாதிரி நடந்து கொள்பவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.

ஆனால் ஆடை பற்றி நான் பேசிய கருத்தும் சின்னதாக ஆடை அணிந்து பெண்கள் செல்வது அவர்களுடைய விருப்பம் அப்படி நீங்கள் குட்டையான ஆடையில் கவர்ச்சியாக உடலை காட்டி வெளியில் செல்லுவதை நான் ஆதரிக்கவில்லை.

ஆண்கள் தொடை தொட்டால்….

ஏதேனும் ஒரு ஆண் தொடையை தொட்டால் நான் உடனே அவனுடைய கழுத்தை பிடிப்பேன். அதுதான் பெண் சுதந்திரம் .

அதற்காக உடம்பில் பொட்டு துணி இல்லாமல் வெளியில் செல்வது பெண் சுதந்திரம் என்று நான் கூறினதே கிடையாது என ரேகா நாயர் தெளிவான விளக்கத்தை கூறியிருக்கிறார்.

சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு அவர் என்னதான் தெளிவான விளக்கத்தை கொடுத்தாலும் அதை நெட்டிசன்ஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து எப்போதும் போலவே அவரை விமர்சித்து தான் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version