என்னை பத்தினி லிஸ்ட்ல.. மகள் முன்பு மோசமாக பேசிய ரேகா நாயர்..!

தற்போதைய சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் தான் ரேகா நாயர். இவர் சீரியலில் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

ஆனால், இவரை மக்கள் பலரும் முகமறியப்பட்டது என்னவோ இவர் யூடியூப் சேனல்களில் பல சச்சையான கருத்துக்களை கூறி பேட்டி கொடுத்து வந்ததால் தான்.

நடிகை ரேகா நாயர்:

பெண்களின் ஆபாசம் குறித்தும், ஆண்களின் வக்கிர பார்வை குறித்தும் சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு கொஞ்சம் வித்தியாசமான முறையில் பதில் கூறி பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தார் ரேகா நாயர்.

அது மட்டும் இல்லாமல் பல நடிகை, நடிகர்களை குறித்த அந்தரங்க விஷயங்களையும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவ்வப்போது விமர்சித்து வீடியோ வெளியிட்டு வந்த பயில்வான் ரங்க நாதனை நடுரோட்டில் இழுத்து அடித்தது குறித்து ரேகா நாயர் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார்.

அதன் பிறகு இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல்கள் திரைப்படத்தில் ரேகா நாயர் அரை நிர்வாணம் ஆக நடித்து பேரதிர்ச்சி ஏற்படுத்தினார்.

அந்த காட்சியை கொச்சைப்படுத்தும் விதமாக விமர்சித்து இருந்த பயில்வானனை தான் அவர் நடுரோட்டில் சந்திக்கும்போதே பளார்னு என அறைந்தது பேசு பொருளாகியது.

சர்ச்சைக்குரிய கருத்துக்கள்:

அதுமட்டுமில்லாமல் பெண் சுதந்திரம் குறித்து துணிச்சலாக பல கருத்துக்களை youtube சேனல்களில் பேசியும் அதிர வைத்து வருவார்.

இவரது பேட்டி என்றால் பரபரப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் குறைவில்லாத வகையில் தான் இவரது கருத்துக்கள் இருக்கும்.

மேலும் பெண்கள் சேலை கட்டிக்கொண்டு கவர்ச்சியாக இடுப்பழகை காட்டி பேருந்தில் பயணித்தால் அதை ஆண்கள் பார்த்து இடுப்பில் கைய வச்சா அதை ரசிக்கணும் என மிகவும் மோசமாக முகம் சுளிக்கும் வகையில் பேசி மக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகினார்.

இந்நிலையில் சமீபத்தை பேட்டி ஒன்றில் தனது மகளுடன் சேர்ந்து அவர் பேசிய விஷயம் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

சமூகத்தில் நடக்கும் பல விஷயங்களை பார்த்து என் மகளுக்கு ஒன்றுதான் கூறுவேன். என்ன நடந்தாலும் என்னிடம் ஓப்பனாக சொல்லிவிடு.

எதுவாக இருந்தாலும் யாரை காதலிப்பதாக இருந்தால் கூட என்னிடம் சொல்லிவிடு அவனைப் பற்றி நான் விசாரித்து நல்லவனாக இருந்தால் ஓகே கெட்டவனாக இருந்தால் கட் பண்ணி விடு என்று நான் உனக்கு அறிவுரை கூறுவேன்.

இங்கு நல்லது பண்ண போனால் நமக்கு தான் பிரச்சனையாகி விடுகிறது. என் தோழி VJ சித்ராவின் தற்கொலை வழக்கில் இன்று வரை நான் கோர்ட்டுக்கு அலைந்து கொண்டிருக்கிறேன்.

நான் பத்தினி கிடையாது:

அவரது குடும்பமே விட்டுவிட்டார்கள். ஆனால் நான் நீதிக்காக போராடுகிறேன் என கூறியிருந்தார். எனக்கு வலிக்கிறது வலிக்கிறது என்று சொன்னால் பிரச்சனை என்னிடம் தான் இருக்கிறது என்னையே சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஒருவேளை நான் வலியை வெளிப்படுத்தாமல் இருந்தால் நான் கெட்ட பெண் எனக்கு முத்திரை குத்தி விடுகிறார்கள் .

ஆம் நான் கெட்ட பெண் தான் எனக்கு உங்களின் பொன்னாடையோ பூ மாலையோ அல்லது அங்கீகாரமோ எதுவுமே எனக்கு வேண்டாம்.

எந்த பத்தினிக்கும் மெரினா பீச்சில் சிலை வைத்ததே கிடையாது. எனவே என்னை நீங்கள் பத்தினி லிஸ்டிலும் போட வேண்டாம்.

எனக்கு அது கவலையே கிடையாது என ரேகா நாயர் தனது மகள் வைத்துக்கொண்டு மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பு கிளப்பி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version