“பையனோட சேர்த்து அதை அடி.. அதனால…” வெளிப்படையாக விளாசும் ரேகா நாயர்..!

நடிகர் ரேகா நாயர் தமிழில் முன்னணி இயக்குனர்கள் ஒருவராக திகழும் பார்த்திபனின் இரவின் நிழல் என்ற படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

இவர் நடிப்பதோடு நின்று விடாமல் பெண் உரிமைகளை குறித்து அடிக்கடி துணிச்சலான கருத்துக்களை இணையங்களில் வெளியிட்டு அனைவரது பாராட்டுதல்களை பெறுவதோடு மட்டுமல்லாமல் கலவை ரீதியான விமர்சனங்களையும் பெற்று விடுவார்.

நடிகை ரேகா நாயர்..

இதனிடையே நடிகை ரேகா நாயரை விமர்சித்த பயில்வான் ரங்க நாதனை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய விவகாரம் உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இதனை அடுத்து போல்டான லேடியாக பலராலும் பேசப்படும் ரேகா நாயர் அண்மை பேட்டி ஒன்றில் பேசிய விஷயத்தினை பார்த்து பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் அவர் கூறியதில் அர்த்தம் உள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழையும் என்ற பழமொழிக்கு ஏற்ப பெண்கள் இன்று பல்வேறு வகைகளில் ஆண்களால் சீரழிக்கப்பட்டு வருகிறார்கள் என்ற பேச்சுக்கு காரணமே பெண்கள் தான் என ஆணித்தரமாக பேசியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் சுதந்திரம் என்ற பெயரில் பெண்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற சுதந்திரத்தை மிஸ் யூஸ் செய்வதாகவும் மிக நேர்த்தியான முறையில் அந்த பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

பையனோட சேர்ந்து..

மேலும் அந்தப் பேட்டியில் அவர் பேசும் போது அதுக்கு என்று பிறந்த ஜெண்டர் தான் ஆண்கள் எனவே அந்த பசங்களோடு சேர்ந்து தண்ணி அடி..

அதனால உனக்கு லிவர் ப்ராப்ளம் வந்தா உன்னால எதிர்கொள்ள முடியுமா… எதையும் யோசித்துப் பார்க்காமல் நாகரிகம் என்ற பெயரில் கட்டுப்பாடு இல்லாமல் பெண்கள் செயல்படுவதை குத்தி காட்டி இருக்கிறார்.

வெளிப்படையாக விளாசிய..

அத்தோடு ஆண் நண்பர்கள்.. காதலன் என சேர்ந்து கொண்டு மது அருந்தும் பெண்மணிகளை வெளிப்படையாக விளாசியுள்ளார் நடிகை ரேகா நாயர்.

இதனை அடுத்து இந்த விஷயமாகவே தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு நாகரீகத்தின் பெயரில் நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களில் கூட இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என்று சொல்லி வருகிறார்கள்.

இப்படியே சென்றால் கலாச்சார சீரழிவு நிச்சயமாக ஏற்பட்டு சுதந்திரம் என்ற பெயரில் சுய ஒழுக்கம் கட்டுப்பாடு என்று சொல்லப்படும் வார்த்தைகளுக்கு மதிப்பே இல்லாமல் சென்று விடும் என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

எனவே ரேகா நாயர் சொன்ன விஷயத்தை ஒன்றுக்கு பல முறை யோசித்து பெண் குழந்தைகளை வளர்க்கக் கூடிய பெற்றோர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இது போன்ற விஷயங்களில் பெண்கள் செல்லாமல் இருக்க உரிய வழிகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார்கள்.

இதை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது. அத்தோடு இந்த விஷயத்தை நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெறிக்க விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version