இறப்பதற்கு முன்பே நடிகை ரேகா செய்த காரியம் – அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் – என்ன இப்படி பண்ணியிருக்காங்க..?

தமிழில் கடந்த 1986-ம் ஆண்டு வெளியான ‘கடலோரக் கவிதைகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேகா ( Actress Rekha ). இவரது உண்மையான பெயர் சுமதி ஜோஸ்பைன் ( Sumathi Josephine ) ஆகும்.

தொடர்ந்து அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், ராமராஜன் உட்பட பலருக்கும் ஜோடியாக நடித்து புகழ்பெற்றார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு பல படங்களில் நடித்திருந்தாலும் அவரது முதல் படமான ‘கடலோரக் கவிதைகள்’ படத்தை யாராலும் மறக்க முடியாது. அதில் டீச்சர் கேரக்டரில் அவ்வளவு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இளசுகளின் வட்டாரத்தை கூண்டோடு கவர்ந்தார்.

அதை அடுத்து அவருக்கு பெயர் வாங்கித் தந்த படம் ‘புன்னகை மன்னன்’. இந்தப் படத்தையும் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இவர் தனது இறப்பு குறித்து அண்மையில் ஒரு பேட்டியில் கூறி அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

அதாவது ரேகா நடித்த படங்கள் பலர் நிறைய பார்த்தாலும் அவரது அப்பா ஒரே ஒரு படம் மட்டும் தான் பார்த்தாராம், அவருக்கு தனது மகள் சினிமாவில் வந்ததே பிடிக்கவில்லையாம்.

கல்லறை ரிசர்வேஷன்..

அப்பா மீது அதிக அன்பு வைத்துள்ள ரேகா கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது தந்தையின் கல்லைரைக்கு அருகிலேயே தனக்காக ஒரு கல்லறையை ஏற்படுத்தியுள்ளார்.

நான் இறந்த பிறகு அந்த கல்லறையில் தான் தனது உடல் அடக்கம் செய்ய வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து வைத்திருக்கிறாராம் ரேகா.

இறப்பதற்கு முன்பே தனக்கான கல்லறையை ரிசர்வ் செய்துள்ள ரேகாவின் இந்த செயலை அறிந்த ரசிகர்கள் ஏன் இப்படியெல்லாம் செய்துள்ளார் என புலம்பித்தான் வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *