இதனால் தான் சீரியல் நடிகைகள் அடிக்கடி விலகி விடுகிறார்கள்.. ரகசியம் உடைத்த ரேகா சுரேஷ்..!

சின்னத்திரை நாடகங்களில் மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் தனது அசாத்திய நடிப்பு திறமையை வெளிப்படுத்திய நடிகை ரேகா சுரேஷ் 1972-ஆம் ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி சென்னையில் பிறந்தவர்.

இவர் தனது பள்ளிப் படிப்பை சிங்காரம் பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்த பிறகு சென்னை பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை முடித்தார். விலங்கியல் துறையில் இளம் கலை பட்டத்தை முடித்து இருக்கக்கூடிய இவர் தனக்கு என்று அதிகளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

சீரியல் நடிகை ரேகா சுரேஷ்..

இவர் சின்னத்தம்பி என்ற தொலைக்காட்சியை சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த தொடரானது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதை அடுத்து இவரின் நடிப்பை பலரும் பல்வேறு வகைகளில் விமர்சனம் செய்தனர்.

இதனை அடுத்து சன் தொலைக்காட்சியில் சுமங்கலி தொடரில் நடித்து தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்ட இவர் சந்திரரேகா, ரங்க விலாஸ், ஆபீஸ், என் வீடு, கல்யாண முதல காதல் வரை, சினேகிதியே போன்ற சீரியல் சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

திரைப்படங்களைப் பொறுத்த வரை 2014-ஆம் ஆண்டு வெளி வந்த தெகடி என்ற படத்தில் நடித்த இவர் எந்திரன், மாநகரம், உப்புக் கருவாடு, நளனும் நந்தினியும், நவீன சரஸ்வதி சபதம் போன்ற படங்களில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களை நடித்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார்.

சமூக வலைதள பக்கங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது வண்ண வண்ண புகைப்படங்களை அணிந்து போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவது போல பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளுக்கும் youtube களுக்கும் பேட்டி கொடுத்து அசர வைப்பார்.

இதனால தான் சீரியல் நடிகைகள் அடிக்கடி விலகறாங்க..

இந்நிலையில் அண்மையில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி எடுத்து இருக்கக்கூடிய ரேகா சுரேஷிடம் தொகுப்பாளர் கேட்ட கேள்வியானது அடிக்கடி சீரியல்களில் இருந்து நடிகைகள் விலகறாங்க அதற்கு என்ன காரணம் என்று கேட்டிருந்தார். இதற்கான காரணத்தை மிகத் தெளிவாக ரேகா சுரேஷ் விளக்கினார்.

அந்த வகையில் ரேகா சுரேஷ் சொல்லும் போது ஒரு வேளை நடிகைகள் அந்த சீரியல் பிடிக்காமல் விலகலாம். அது மட்டுமல்லாமல் டிவி சேனல்கள் அவர் தேவையில்லை என்ற நோக்கத்தோடு விலக சொல்ல கூடிய நிலையும் உள்ளது.

ஆனால் அதையும் தாண்டி நடக்கின்ற விஷயம் என்னவென்றால் ஒரு ஷூட்டிங்கில் கமிட் ஆகி முடித்தவுடன் அதில் நடிக்கக்கூடிய சமயத்தில் ஒரு மாதத்தில் நான்கு நாட்கள் அல்லது 10 நாட்கள் ஷூட்டிங் இருக்கும்.

சில சமயம் அதுவே வெறும் இரண்டு, மூன்று நாட்களுக்குள் முடிந்து விட்டால் அந்த மாதமே பணி செய்யாதது போல நீண்ட நாட்கள் இருப்பது போல அமைந்து விடும்.

அந்த சமயத்தில் தான் அவர்கள் ஏன் மற்றொரு பிராஜெக்ட்டில் கமிட்டாக கூடாது என்று நினைத்து கமிட் ஆகி விடுவார்கள். அப்படி கமிட்டான பிறகு அங்கு நாள், நேரம், தேதி போன்றவை ஒத்து வராமல் எல்லோருக்கும் தொந்தரவினை ஏற்படுத்தி தரும்.

ரகசியம் உடைத்த ரேகா சுரேஷ்..

எப்படி டேட் கிளாஸ் ஆவதினால் சீரியலில் நடிகைகள் அடிக்கடி விலக கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. அது மட்டுமல்லாமல் இக்கட்டான சமயங்கள் ஏற்படும் போது இது போல நடிகைகளை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு சீரியல் எடுக்கக்கூடிய இயக்குனர்கள் தள்ளப்படுகிறார்கள் என்று கூறினார்.

மேலும் இவருக்கும் இது போன்ற அனுபவம் ஏற்பட்டதாகவும் சொல்லியிருக்கக்கூடிய இவரிடம் தொகுப்பாளர் மேலும் சில விஷயங்களை பகிர்ந்தார். அதாவது சீரியலில் நடிக்கக்கூடிய பெண்களுக்கு முகப்பரு அதிகமாக இருந்ததின் காரணத்தால் அந்த சீரியல் இருந்து நீக்கி விட்டதாகவும் உடல் பருமன் அதிகமாக இருந்ததாலும் அவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகவும் சொன்னார்.

மேலும் ரீல் டிக் டாக் போன்ற செயல்களில் தங்களது திறமைகளை வெளிக்காட்டி பல நபர்கள் வந்துவிட்டதால் இன்று சீரியல் நடிக்க தேவையான நடிகைகளை எளிதில் தேர்ந்தெடுக்க முடிகிறது அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam