கரப்பான் பூச்சிகள் வெப்பமான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைகளில் அபரிமிதமாக பல்கி பெருகும். பழைய மர கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றில் அதிகளமாக இது வளர்கிறது.
எப்படிப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தை அடித்தாலும் ஒரு வாரம் தான் மீண்டும் கரப்பான் தொல்லை அதிகமாக உள்ளது. பார்க்கவே முகத்தை சுளிக்க வைக்க கூடிய இந்த கரப்பான் பூச்சி பொதுவாக சமையலறை மற்றும் குளியல் அறையில் அதிக அளவு காணப்படும் அருவருக்கத் தக்க இந்த பூச்சியை பார்த்து அனைவரும் அலறி ஓடுவார்கள்.
அத்தகைய கரப்பான் பூச்சிகளை மிக எளிதில் ஓட்டக்கூடிய அருமையான குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.
வெள்ளை வினிகரில் இளம் சூடான நீரில் கலந்து உங்கள் சமையல் முடிந்த பின்பு கேஸ் அடுப்பை சுற்றிலும் இந்த கரைசலை கொண்டு சுத்தம் செய்யலாம் பகல் வேலைகள் மட்டுமல்லாமல் இரவு படுக்க செல்வதற்கும் முன்பும் இந்த கலவையைக் கொண்டு உங்கள் அடுப்பு மற்றும் மேசைத் திட்டை சுத்தம் செய்யும் போது கரப்பான் பூச்சி எட்டிப்பார்க்காது.
மீதி தண்ணீரை நீங்கள் உங்கள் சிங்க் பகுதியில் ஊற்றி விட்டால் சிங்க் குழாய்களில் இருக்கும் கரப்பான் பூச்சிகளும் இதன் வாடை தாங்காமல் வெளியேறிவிடும்.
மேலும் தண்ணீரில் எலுமிச்சம்பழம் மற்றும் சமையல் சோடாவை கலந்து நீங்கள் இந்த கலவையை நன்றாக குலுக்கி ஒரு ஸ்ப்ரேயரில் ஊற்றி சமையல் அறையில் இருக்கக்கூடிய அலமாரிகள் மற்றும் குளியலறையில் இருக்கக்கூடிய பகுதிகளில் நன்கு அடித்து விடவும்.
இந்த ஸ்பிரேயரை பயன்படுத்தி மூன்று வேளையும் தொடர்ந்து நீங்கள் அடிக்கும் போது அங்கீகரிக்கும் கரப்பான் பூச்சிகள் அனைத்தும் விரைவில் வேறொரு இடத்திற்கு போவதோடு மட்டுமல்லாமல் அதனால் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் போய்விடும்.
சிறிதளவு போரிக் அமிலம் மற்றும் சர்க்கரையை நன்றாக கலந்து இந்த கரைசலை கரப்பான் பூச்சி இருக்கும் இடங்களில் தெளித்து விடவும். பூச்சிகளை ஈர்க்கக்கூடிய தன்மை உள்ள போரிக் அமிலம் அதைக் கொன்றுவிடும்.
மேலும் சரும பராமரிப்புக்கு உதவி செய்யும் லாவண்டர் எண்ணெய் கரப்பான் பூச்சி தொல்லைகளிலிருந்து உங்களை காப்பாற்ற உதவும். இந்த எண்ணெய்களை சமையலறை திட்டுக்கள் மற்றும் குளியல் அறைகளில் நீங்கள் தெளிப்பதின் மூலம் கரப்பான் பூச்சி உங்களை பார்த்து தலை தெரித்து ஓடிவிடும்.
கரப்பான் பூச்சிக்கு வெள்ளரிக்காய் என்றாலே அலர்ஜி இதனுடைய வாசம் கரப்பான் பூச்சிக்கு பிடிக்காது. எனவே வெள்ளரிக்காய் பிஞ்சை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கரப்பான் பூச்சி இருக்கும் பகுதியில் போட்டி வைத்தால் கரப்பான் பூச்சி எட்டி பார்க்காது.
லவங்கப்பட்டையின் மனம் கரப்பானுக்கு எதிராக வேலை செய்யும் என்பதால் இலவங்கப்பட்டையை நன்றாக பொடி செய்து உப்பு தூளோடு கலந்து கரப்பான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் நீங்கள் பூசி விட்டால் கரப்பான் பூச்சி மற்றும் அதன் முட்டைகளை அழிக்கக்கூடிய தன்மை இதற்கு உள்ளது.