” கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது..!” – எளிதில் கண் திருஷ்டியை விரட்டி அடிக்கும் பரிகாரங்கள்..!!

 வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் தடைகள் சோகம், பிரிவு, நஷ்டம் போன்றவை எல்லாம் ஏற்படுகிறது என்றால் இதற்கு காரணம் என்ன என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும். தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகள் உங்கள் வீட்டில் தொடர்ந்து நிகழ்கிறது என்றால் அதற்கு கண் திருஷ்டி காரணம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 கண் திருஷ்டி அதிக அளவு இருக்கும் வீட்டில்தான் இதுபோன்ற பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்படும். அதுமட்டுமல்லாமல் ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் வருவதோடு செய்கின்ற உணவை சாப்பிடப் பிடிக்காமல் திண்டாடுவார்கள்.

 மேலும் எல்லோரிடமும் எந்த காரணம் இல்லாமல் எரிந்து விழுவது, தூக்கம் இன்மை, எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுவதும் இந்த கண் திருஷ்டியால் உருவாகிறது.

 அப்படிப்பட்ட கொடிய இந்த கண் திருஷ்டியை நாம் எப்படி எளிய பரிகாரங்கள் மூலம் விரட்டியடிக்கலாம் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

 வீட்டில் கண் திருஷ்டி நீங்க செய்ய வேண்டியது

 👍வீட்டில் கண் திருஷ்டி நீங்க வேண்டுமென்றால் வாசல் பகுதியில் நீங்கள் கற்றாழை, சப்பாத்திக்கள்ளி போன்ற முள் இருக்கும் செடிகளை வளர்க்கலாம். குறிப்பாக மஞ்சள் ரோஜா செடியை வளர்ப்பதின் மூலம் கண் திருஷ்டி நீங்கும்.

👍 வீட்டின் முற்றத்தில் முன் பகுதியில் நீங்கள் ஆகாச கருடன் கிழங்கை கட்டி விடலாம். இது வளரும்போது கண் திருஷ்டி ஏற்பட்டால் அப்படியே கருகி அந்த திருஷ்டியை வெளியேற்றி விடும் என்று கூறுவார்கள்.

👍வாரம் ஒரு முறை நீங்கள் குளிக்கும் போது அந்த நீரில் உப்புக்களை கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல், சோர்வு இவை நீங்கும். குறிப்பாக நீங்கள் பிறந்த கிழமைகளில் நீங்கள்  இந்த மாதிரி கல் உப்பை பயன்படுத்தி குளிக்கலாம்.

👍 வியாபாரம் செய்யக்கூடிய பகுதிகளிலும், தொழில் நிமித்தமாக நீங்கள் வெளியே செல்லும்போது எலுமிச்சம் பழத்தை எடுத்து அதை நான்காக கீரி அதை குங்குமத்தை தடவி உங்கள் தலையை சுற்றி வீசி விட வேண்டு.ம் இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நீங்கள் செய்வதின் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

👍 மனிதர்களுக்கு திருஷ்டியை கழிப்பதைப் போலவே தொழில் செய்யும் கடைகளிலும் நீங்கள் இதுபோல செய்து திருஷ்டியை வெளியேற்றிவிடலாம்.

👍 நீங்கள் எப்போதாவது கடற்கரைக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தால் கடல் நீரை கொண்டு வந்து ஒரு  பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த நீரோடு மஞ்சள் பொடி சிறிதளவு துளசி இதனைக் கலந்து உங்கள் வீடு, கடை, அலுவலகம் போன்ற பகுதிகளில் மூன்று முறை தெளித்து விடுவது மிகவும் நல்லது.

👍 சூடம் சுற்றுவது, மிளகாய் சுற்றி போடுவது, திரி சுற்றி போடுவதின் மூலமும் நீங்கள் திருஷ்டியை வெளியேற்ற முடியும். செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி தூபத்தை வீட்டுக்கு உள்ளும், வெளியிலும் கடையிலும் கடைக்கு உள்ளும் காட்டுவது மிகவும் நல்லது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …