“நீங்கள் இந்த லிக்விடை செய்து உங்கள் துணிகளில் பயன்படுத்திப்பாருங்கள்..!” – கரையான துணியா இது என ஷாக்காவீர்கள்..!!

பொதுவாக இன்று நாம் உடுத்தும் துணிமணிகளை மைல்டாக யூஸ் பண்ணும் போது எந்த விதமான அதிக அளவு அழுகோ கரையோ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இதுவே கடினமான பணியின் போது நமது உடைகளில் கரை பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 இந்த கரை படிந்த துணிகளை நாம் வாஷிங் மிஷினில் போட்டு ஈசியாக கரையில்லாமல் எப்படி துவைக்க முடியும் என்பதற்கான குறிப்புகளை பார்க்கலாம்.

 எவ்வளவு விலை உயர்ந்த வாஷிங்மெஷினை நாம் வைத்திருந்தாலும் அது கரையுள்ள துணியை போட்டு துவைக்கும் போது கரையை நீக்குவது என்பது சவாலான விஷயமாகவே உள்ளது.

 எத்தனையோ விளம்பரங்களில் பயன்படுத்த சொல்லி இருக்கக்கூடிய அந்த லிக்விடுகளை நாம் பயன்படுத்தினாலும் அது சரியான ரிசல்ட்டை நமக்கு தராமல் இருப்பதால் மீண்டும் அந்த உடைகளை அணியாமல் அப்படியே போட்டு விடுவோம். அப்படிப்பட்ட கரை நிறைந்த துணிமணிகளில் இருக்கின்ற கறைகளை எளிதில் நீக்கக்கூடிய வழிகள் என்னென்ன தெரியுமா?

முதலில் அந்த வழியை தெரிந்து கொள்வதற்கு முன்பு சில குறிப்புகளை நாம் பின்பற்ற வேண்டும். அது நாம் ஒட்டுமொத்தமாக அழுக்குகளை அழுக்கு கூடையில் போடாமல் பட்டுத்துணிகள், உள்ளாடைக,ள் தினசரி உடுத்தும் ஆடைகள் என தனித்தனியாக பிரித்து வைத்து துவைப்பதின் மூலம் எளிதாக துவைக்கலாம்.

மேலும் கரை அதிகம் உள்ள துணிகளில் பேக்கிங் சோடா, வினிகர் சேர்த்து தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். பின்பு கரை இருக்கும் இடத்தில் லேசாக கையால் அழுத்தி தேய்த்து விடவும். எந்த கரையாக இருந்தாலும் அது அப்படியே நீங்கி துணி பழைய நிறத்திற்கு வந்து விடும்.

 இதனை அடுத்து நீங்கள் எந்த துணியை வாஷிங்மெஷினில் போட்டு எப்போதும் போல் துவைத்து விடலாம். அதுபோலவே துணி மணிகளில் இருக்கும் மஞ்சள் நிற கரையை நீக்குவதற்கு எலுமிச்சை சாறு தேய்த்து கால் மணி நேரம் ஊற வைத்து கைகளால் கசக்கிய பின் அந்த துணியை நீங்கள் வாஷிங்மெஷினில் போட்டு துவைக்க வேண்டும்.

 மேலும் தரம் பிரித்து வைத்திருக்க கூடிய துணிகளுக்கு ஏற்ப நீங்கள் துணி துவைக்கும் லிக்விட் அல்லது பொடியை பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும்.

மேலும் துணிகளில் அதிக அளவு அழுக்கு இருந்தால் சிறிதளவு வினிகரை நீங்கள் பயன்படுத்தலாம்.மேலும் கடினமான கரை இருக்கக்கூடிய சிறிதளவு லைசாலை தெளித்து நன்கு கைகளால் தேய்த்து கால் மணி நேரம் அல்லது அரை மணி நேரம் நீரில் ஊறவைத்து பின்பு அதை வாஷிங் மிஷினில் போட்டு துவைக்கலாம்.

 இவ்வாறு செய்வதின் மூலம் உங்களுக்கு துணிகளில் இருக்கக்கூடிய கரைகள் நீங்கிவிடும்.  நீங்கள் துணிகளை வெயிலான இடத்தில் உலர்த்தாமல் சற்று நிழலான பகுதிகளில் உலர்த்துவதின் மூலம் துணிகளில் தரம் மேம்பட்டு எப்போதும் வாங்கிய நிறத்திலேயே மிளிரும்.

அது மட்டுமல்ல காற்றோட்டமான இடத்தில் துணிகளை உலர்த்துவதின் மூலம் கெட்ட வாடை துணிகளில் ஏற்படாமல் தடுக்க முடியும் அதுமட்டுமல்லாமல் துவைத்து அலசும் போது ஒரு சொட்டு பெர்பியூம் விட்டு நீங்கள் அலாசி விட்டால் துணிகளில் கம கம என்று வாசம் வரும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam