உடல் எடை குறைக்க டிப்ஸ் : நாம் பாரம்பரிய உணவுகளை விடுத்து விட்டு இன்று துரித உணவினை எடுத்துக் கொள்வதின் மூலம் எண்ணற்ற சீர்கேடு உடலில் ஏற்பட்டுள்ளது. அந்த வரிசையில் அதிகபட்ச கொலஸ்ட்ரால் நமது உடலில் இருப்பதால் எண்ணற்ற பாதிப்புகள் உடலுக்கு ஏற்பட்டு ஆரோக்கியம் சீர்குலைகிறது.
இதனால் தான் இளம் வயதினரையே தாக்கக்கூடிய இதய நோய் இந்த கொலஸ்ட்ரால் அதிகரிப்பாட்டால் ஏற்படுகிறது. இதனை தடுக்கவும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கக்கூடிய எளிய வழிகள் என்னென்ன என்று தெரியுமா?
கொலஸ்ட்ராலை குறைக்கும் எளிய வழிகள்:
நீங்கள் உட்கொள்ளக்கூடிய உணவில் இருக்கக்கூடிய அதிகபட்சமான ட்ரான்ஸ் கொழுப்புகளை நீங்கள் கட்டாயம் குறைப்பது உங்களுக்கு நல்லது.
மேலும் கட்டாயம் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் கால் மணி நேரத்தில் இருந்து அரை மணி நேரமாவது நீங்கள் உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது அதிகபட்ச கொழுப்பு எரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மேலும் நடை பயிற்சியை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். குறைந்த பச்சம் நான்கு கிலோமீட்டர் அளவு நீங்கள் ஒரு நாளைக்கு நடப்பது நல்லது.
மேலும் நார்ச்சத்து அதிகமாக இருக்கக்கூடிய உணவுகளை நீங்கள் உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் எண்ணெயை பயன்படுத்தும் போது சுழற்சி முறையில் அவற்றை பயன்படுத்துவது நல்லது.
குறிப்பாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற பாரம்பரிய எண்ணெய்களை உணவில் பயன்படுத்துங்கள்.
ரீபைண்ட் ஆயில் பயன்படுத்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. மேலும் நீங்கள் ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவது கூடுதல் சிறப்பு கொடுக்கும்.
மேலும் உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க வேண்டும் என்றால் கட்டாயம் உடல் எடையை நீங்கள் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் உயரத்துக்கு ஏற்ற உடல் எடையை பராமரிப்பது மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதுபோல் கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால் கெட்ட கொலஸ்ட்ரால் என்று இரண்டு வகைகள் உள்ளது.
இதில் தீமை பயக்கும் கொலஸ்ட்ராலை தான் நாம் தவிர்க்க வேண்டும். எனவே நன்மைகள் கூடிய கொலஸ்ட்ரால் நெய்யில் இருப்பதால் அதை உணவில் கட்டாயம் தினமும் உங்களுக்கு போதுமான அளவு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த வழிமுறைகளை நீங்கள் பின்பற்றும் போது கட்டாயமாக உங்கள் உடலில் இருக்கக்கூடிய அதிகபட்ச கொலஸ்ட்ரால் எரிக்கப்பட்டு தேவையான கொலஸ்ட்ரால் மட்டுமே உங்கள் உடலில் இருப்பதால் ஆரோக்கியம் அருமையாக பேணப்படும்.