ஏழரைச் சனியின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள..! – இதை பண்ணுங்க..! – நல்ல முன்னேற்றம்..!

ஜோதிட சாஸ்திரப்படி சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்வார். அப்படி ஒரு ராசியை விட்டு மற்றொரு ராசிக்கு இடம் பெயர்ந்து செல்வதை சனிப்பெயர்ச்சி என்று அழைப்பார்கள். ஒவ்வொரு மனிதருக்கும் இந்த சனி பெயர்ச்சியால் ஏற்படுகின்ற ஏழரைச் சனி என்றாலே ஒரு வித பயம் அவர்களுக்குள் தானாக ஏற்படும். அதிலும் சனிதோஷம் நிறைந்தவர்களுக்கு இதன் தாக்கமும் பாதிப்பும் அதிகளவு இருக்கும்.

 மூன்று சுற்றுக்களாக நடக்கக்கூடிய இந்த ஏழரைச் சனி அவரவர் ஜாதக கட்டப்படி பலாபலனை தரும். சனீஸ்வரன் நீதியின் கடவுள் என்பதால் அந்த ஏழரைச் சனி  நடக்கக்கூடிய காலகட்டத்தில் கவனத்துடன் இருப்பது மிகவும் சிறப்பானது.

 மேலும் ஏழரை சனியால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட எந்த இரண்டு கடவுளை வழிபடுவதின் மூலம் அந்த சனியின் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம்.

ஏழரைச் சனியின் பாதிப்பிலிருந்து நம்மை காக்கும் ஹனுமான்

 ஏழரைச் சனியின் பாதிப்பில் இருக்கக்கூடிய மனிதர்கள் அனைவருமே ஹனுமன் மந்திரத்தை சனிக்கிழமை தோறும் உச்சரித்து சனிக்கிழமை விரதம் இருந்து  வரவேண்டும்.

 மேலும் இவர்கள் ஊனமுற்றவர்களுக்கு வஸ்திரதானம், அன்னதானம் செய்வதின் மூலம் சனி ப்ரீத்தி அடைவார். இதன் மூலம் சனியின் தாக்குதலில் இருந்து ஓரளவு உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

 சனியின் தாக்குதலில் இருந்து நம்மை காக்கும் விநாயகர்

எந்த செயலையும் விக்னம் இல்லாமல் செய்ய வேண்டும் என்றால் விநாயகர் அருள் வேண்டும். அது போல் இந்த விநாயகரை நீங்கள் கட்டியாக பிடித்துக் கொண்டால் ஏழரைச் சனியின் பாதிப்பு உங்களுக்கு ஏற்படாது. சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து விநாயகப் பெருமானின் மந்திரங்களை கூறுவதின் மூலம் நீங்கள் அவரின் தாக்குதலில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

 மேலும் தினமும் நீங்கள் பிள்ளையார் கோயிலுக்கு சென்று பிள்ளையாரை தரிசித்து வருவது கூடுதல் நலனை தரும்.

மேற்கூறிய இந்த கடவுள்கள் இந்த இரண்டு கடவுள்களையும் நீங்கள் கட்டியாக பிடித்துக் கொண்டு சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து சனீஸ்வரனையும் வழிபட்டால் போதும் முடிந்தால் நவகிரக கோவில்களுக்கு ஒரு முறை சென்று வாருங்கள்.

 இல்லையென்றால் அருகில் இருக்கும் நவகிரகங்கள் இருக்கக்கூடிய கோவில்களுக்கு சென்று நவகிரகங்களை ஒன்பது முறை வலம் வருவது நன்மை தரும் குறிப்பாக சனிக்கிழமைகளில் எந்த வழிபாட்டை நீங்கள் செய்வது நல்லது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …