” கை, கால் முழிகள் பார்க்கவே அசிங்கமாக கருப்பு நிறத்தில் காட்சி தருகிறதா..!” இதனை பாலோ செய்து பாருங்கள் ரிசல்ட் 100%..!!

 அழகாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவது இன்று நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அதுவும் முகத்துக்கு நாம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு கை, கால் முழிகளுக்கு நாம்  முக்கியத்துவம் கொடுக்கிறோமோ என்றால் அது சந்தேகம் தான்.

எனவே இன்று நிறைய நபர்களின் முழங்கை மற்றும் முழங்கால் பகுதிகளில் அதிகளவு கருமை நிறம் இருக்கும். இந்த கருமையான நிறத்தை அவர்கள் மறைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மேலும் அந்த நிறத்தை பெற பல வழிகளில் அவர்கள்  முயற்சி செய்தாலும் சரியான பலன் கிடைத்திருக்காது.

 அந்த வகையில் இயற்கையான முறையில் முழங்கை மற்றும் முழங்கால் பகுதிகளில் இருக்கக்கூடிய கருமை நிறத்தை எப்படி  போக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாமா.

முழங்கை மற்றும் முழங்கால்களில் இருக்கும் கருப்பு நீங்க

💐முழங்கை மற்றும் முழங்கால்களில் இருக்கும் கருப்பை நீக்கக்கூடிய ஆற்றல் எலுமிச்சைச் சாறுக்கு உள்ளது. ஏற்கனவே இது மேனி பராமரிப்பில் அதிக அளவு ஈடுபாடு கொண்ட ஒரு பொருள் என்பதால் எந்த எலுமிச்சை சாறை கொண்டு நாம் அந்த முழங்கை முழங்கால் பகுதிகளில் இருக்கக்கூடிய கருப்பினை நீக்க முடியும்.

 💐எலுமிச்சை சாறை எடுத்து அதை உங்கள் முழங்கை பகுதிகளில் தடவி பத்து பதினைந்து நிமிடங்கள் ஊற விட்டு விடுங்கள். இதன் பிறகு குளித்து விடுங்கள். இது போல் தொடர்ந்து செய்வதால் உங்கள் முழங்கை முழங்கால் பகுதிகளில் இருக்கும் கருப்பு நிறம் அடியோடும் மறைந்துவிடும்.

💐 மேலும் தேங்காய் எண்ணெயை தினமும் நீங்கள் கை மற்றும் கால் பகுதிகளில் தேய்த்து விடுங்கள். அவ்வாறு தேய்க்கும் போது அந்த கருப்பு நிறைந்த பகுதியில் சற்று மசாஜ் செய்து தேய்த்து விடவும். இவ்வாறு செய்து விடுவதின் மூலம் நாளடைவில் கருப்பு குறைந்து இயல்பு தோளில் நிறத்தை அடையும்.

💐 மஞ்சள் மற்றும் பாலை ஒன்றாக கலந்து கருப்பு நிறமாக இருக்கும் பகுதியில் பூசி விடுங்கள். சிறிது நேரம் இந்த கலவை அப்படியே இருக்கட்டும் அரை மணி நேரம் கழித்த பின்பு இதை நீரில் கழுவி விடுங்கள். இதனைத் தொடர்ந்து செய்வதின் மூலம் கருப்புகள் மறைந்து விடும்.

💐 அதுபோலவே கற்றாழை ஜெல்லும் ஒரு அற்புதமான மாய்சரைசர் என்பதால் அது முழங்கையில் மற்றும் முழங்காலில் இருக்கக்கூடிய கருப்பை நீக்க வல்லது. இந்த ஜெல்லை கருமையாக இருக்கக்கூடிய பகுதியில் தேய்த்து விட்டு அரை மணி நேரம் ஊற விடவும். பிறகு நல்ல நீரில் கழுவி விடவும் இது போல தொடர்ந்து செய்வதால் நீங்களே உங்கள் மாற்றத்தை தெரிந்து கொள்ளலாம்.

💐 உருளைக்கிழங்கு சாறுக்கும் கருப்பை எடுக்கின்ற சக்தி உள்ளதால் உருளைக்கிழங்கு சாறை எடுத்து கருமையாக இருக்கக்கூடிய முழங்கை முழங்கால் பகுதிகளில் தேய்த்து விட்டு பின்பு கழுவவும்.

இவ்வாறு தொடர்ந்து செய்வதின் மூலம் முழங்கை மற்றும் முழங்கால் பகுதியில் இருக்கக்கூடிய கருமை நிறம் மாறி இயல்பான தோல் நிறத்திற்கு வரும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …