ஒருத்தரையும் விடமாட்டார் ஜெயம் ரவி மனைவி.. சண்டைக்கு காரணமே இது தான்.. போட்டு உடைத்த பிரபலம்..!

கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தியின் விவாகரத்து குறித்த விஷயங்கள் இருந்து வருகின்றன. பல வருடங்களாகவே தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி.

அவரது மனைவி ஆர்த்தியை காதலித்துதான் திருமணம் செய்து இருந்தார் என்றாலும் கூட பல வருடங்களுக்கு பிறகு அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருவதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஜெயம் ரவியின் மாமியார் தமிழ் சினிமாவில் பெரிய தயாரிப்பாளராக இருந்து வருகிறார்.

அவர்தான் இந்த விவாகரத்து பிரச்சனைக்கு ஆரம்ப காரணம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை. அவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டும் தான் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

ஜெயம் ரவி பிரச்சனை:

மற்ற திரைப்படங்கள் எல்லாம் அவ்வளவாக வெற்றியை கொடுக்கவில்லை முக்கியமாக சமீபத்தில் வெளியான சைரன் திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது. இந்த திரைப்படத்தையும் ஜெயம் ரவியின் மாமியார்தான் தயாரித்திருந்தார்.

அதனை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்து ஜெயம் ரவி நடித்து வந்த திரைப்படத்தையும் மாமியார்தான் தயாரிக்க இயந்தார். அந்த திரைப்படத்திற்கு சம்பளத்தை அவர் குறைத்து விட்டதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

25 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஜெயம்ரவிக்கு சம்பளத்தை குறைத்து அவர் பேசியதால் அதுவே கருத்து வேறுபாடாக மாறி பிறகு ஆர்த்தியுடன் சண்டைக்கு வழிவகுத்தது என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

இதுதான் காரணம்:

இதற்கு நடுவே பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது அந்த படத்தில் நடித்த நடிகையுடன் ஜெயம் ரவிக்கு தொடர்பு இருந்ததாகவும் அதனால்தான் அவரது மனைவி விவாகரத்துக்கு முன் வந்துள்ளார் என்றும் ஒரு பேச்சு இருக்கிறது.

ஆனால் இதற்கு நடுவே பத்திரிகையாளர் அந்தணன் இது குறித்து முக்கிய தகவல் ஒன்றை கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் இடையேயான பிரச்சனைக்கு இந்த சம்பள விஷயம் ஒரு முக்கிய காரணம் என்றாலும் கூட ஆர்த்தி மிகவும் சந்தேகம் கொண்ட ஒரு நபர் என்பதும் இதற்கு முக்கிய காரணமாகும்.

ஆர்த்தி ஜெயம் ரவிக்கு அடிக்கடி போன் செய்யக்கூடியவர் ஜெயம் ரவி போனை எடுக்கவில்லை என்றால் அந்தப் படத்தில் பணி புரியும் இயக்குனர் கேமராமேன் துணை இயக்குனர் என பலருக்கும் போன் செய்வார் ஒரு ஆளை கூட விட்டு வைக்க மாட்டார். அனைவருக்கும் போன் செய்து ஜெயம் ரவியை பற்றி விசாரித்துக் கொண்டே இருப்பார்.

ஒருவேளை யாருமே போனை எடுக்கவில்லை என்றால் படப்பிடிப்பு தளத்திற்கு கிளம்பி வந்து விடுவார் இந்த மாதிரியான பிரச்சனைகள் தான் தற்சமயம் இவர்கள் இருவருக்கும் இடையே பிரிவினை ஏற்படுத்தி இருக்கிறது என்கிறார் அந்தணன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version