தமிழ் சினிமாவில் ஒரே திரைப்படத்தில் அதிகமாக வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக ரேஷ்மா பசுபுலேட்டி இருந்து வருகிறார். திரை பின்னணியை கொண்ட ரேஷ்மா பல வருடங்களாகவே சினிமாவில் முயற்சித்து வந்து கொண்டு இருந்தார்.
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் திரைப்படத்தில் இவர் நடித்த புஷ்பா என்கிற கதாபாத்திரம் அதிகமான வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகளும் கிடைத்தன.
விலங்கு என்கிற வெப் சீரிஸில் சர்ச்சைக்குரிய ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரேஷ்மா. இவர் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் என்று கூறலாம். சன் டிவியில் பிரபல தொடரான வாணி ராணி, வம்சம், மரகத வீணை போன்ற சீரியலில் ரேஷ்மா நடித்திருக்கிறார்.
சினிமா வரவேற்பு:
அதிகபட்சம் ரேஷ்மா அவர் நடிக்கும் நாடகங்களில் எல்லாம் வில்லி கதாபாத்திரத்தில்தான் நடிப்பார் இந்த நிலையில் இவருக்கு விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
பாக்கியலட்சுமி சீரியலை பொறுத்தவரை அதிலும் வில்லி கதாபாத்திரத்தில்தான் நடித்திருந்தார். ஆனால் அவரது கதாபாத்திரத்திற்கு எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து ஜீ தமிழில் வெளியான சீதாராமன் என்கிற தொடரிலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.
இன்ஸ்டாகிராமில் அதிகமான ஃபாலோவர்ஸ்களை வைத்திருக்கும் சீரியல் நடிகை என்றால் அது ரேஷ்மா பசுபுலேட்டிதான். இந்த நிலையில் சமீபத்தில் அவர் வாழ்க்கையில் நடந்த மோசமான நிகழ்வு ஒன்றை தனது பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் ரேஷ்மா.
வாழ்க்கையில் நடந்த கொடூரம்:
அதில் அவர் கூறும் பொழுது எனது வாழ்க்கையில் நான் நிறைய வேதனைகளை சந்தித்து இருக்கிறேன். திருமணத்திற்கு பிறகு எனது கணவருடன் நான் அமெரிக்காவில் இருந்தேன். எனது கணவர் ஒரு பாக்ஸராக இருந்தார்.
அதற்காக நிறைய உடற்பயிற்சிகளை செய்து வந்தார். நிறைய மாத்திரைகளையும் மருந்துகளையும் அதற்காக அவர் எடுத்துக் கொண்டார் இந்த நிலையில் நான் 4 மாத கர்ப்பமாக இருந்தேன்.
ஒரு பிரச்சனையின் பொழுது நான் கர்ப்பமாக இருப்பதை மறந்து விட்டு அவர் என்னை பலமாக அடித்துவிட்டார். அதன் காரணமாக அப்பொழுது குழந்தை வெளியில் வந்துவிட்டது. அதை பார்த்து பயந்த அவர் என்னை விட்டுவிட்டு ஓடிவிட்டார்.
பிள்ளைக்காக செய்தேன்:
என்ன செய்வது என்று தெரியாமல் நான் அதோடு காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனையில் போய் சேர்ந்தேன். நான்கரை மாத குழந்தையாக எனது பிள்ளையை வெளியில் எடுத்தனர். பிறகு 9 மாதம் வரை அதை இங்குபேட்டரில் தான் வைத்திருந்தனர்.
அவனுக்காக நான் பார்க்காத வைத்தியம் இல்லை. செய்யாத செலவு இல்லை அதன் பிறகுதான் எனது மகன் ராகுல் எனது கைக்கு வந்தான்.இதேபோல ராகுல் பிறப்பதற்கு முன்பு எனக்கு ஒரு குழந்தை இறந்தே பிறந்தது. இதனால் ராகுலும் இறந்துவிடுவானோ என்கிற பயம் எனக்குள் இருந்தது.
வாழ்க்கையில் சிரித்துக் கொண்டே இருப்பவர்கள் சிலரின் பின்னால் இப்படி ஒரு சோகமான கதை இருக்கும் ஆனால் வெளியில் பார்ப்பவர்களுக்கு அது தெரியாது என்று கூறுகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி.