பார்ட்னருக்கு முதலில் இந்த இடத்தில் முத்தம் கொடுக்கணும்.. அப்புறம்.. கூச்சமே இல்லாமல் கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..!

சின்னத்திரை வெள்ளித்திரை என்று இரண்டு குதிரைகளையும் வேகமாக பயணித்து வந்த நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி பற்றி பெரிய அளவு விஷயங்களை உங்களுக்கு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

இவர் அமெரிக்காவில் டெக் டாஸ் நகரில் தனது பட்டப்படிப்பை முடித்த கையோடு சினிமாவில் பல நல்ல திரைப்படங்களை தயாரித்து வழங்கிய தெலுங்கு தயாரிப்பாளரின் மகள். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் தற்போது நடித்த வருகிறார்.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி..

சீரியலில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்திருக்கும் இவர் ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசத்தியிருக்கிறார்.

சீரியல் மட்டுமல்லாமல் 2015 – ஆம் ஆண்டு வெளி வந்த மசாலா படம் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான இவர் விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களின் மத்தியில் ரீச் ஆனார்.

இந்தப் படத்தை அடுத்து ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிய இவர் அடுத்தடுத்து மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற படங்களில் சின்ன, சின்ன கேரக்டர்களின் நடிக்க கூடிய வாய்ப்பை பெற்று அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்டார்.

அந்தரங்க விஷயங்கள்..

சின்னத்திரையில் முக்கிய நடிகையாக இருக்கும் ரேஷ்மா சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களை எப்போதும் தன் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றுவார்.

இந்தப் பதிவுகள் பொதுவாக ரசிகர்களின் மத்தியில் ஆதரவை பெறுவதோடு கூடுதல் கவர்ச்சியோடு இருப்பதை அடுத்து Instagram பக்கத்தை அதிக அளவு நபர்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இவரது ரசிகர்கள் எப்போதும் தங்கள் தூக்கத்தை கெடுத்து விடக் கூடிய அளவு மேனி அழகை கட்டுக்கடங்காமல் காட்டி தங்களை பாடாய்படுத்துவதாய் ஒவ்வொரு முறையும் சொல்லி வந்தாலும் அது பற்றி இவர் கவலை கொள்வதே இல்லை.

மேலும் இவர் தற்போது you tube சேனல் ஒன்றில் அந்தரங்க விஷயத்தை வெளிப்படையாக பேசும் விவகாரமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

பார்ட்னருக்கு முதலில் இந்த இடத்தில் முத்தம் கொடுக்கணும்..

அப்படி அந்த பிரபல யூட்யூப் நிகழ்ச்சியில் இவர் முத்தத்தின் வகைகளை பிரித்து பேசி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருப்பதோடு அழகான ஆண்கள் அழகாக இருந்தால் மட்டும் போதாது, பெண்கள் மனதையும் அவர்களின் ஆசையையும் புரிந்து கொள்ள வேண்டும் என சொல்லி இருக்கிறார்.

இப்படி நடந்து கொள்வதின் மூலம் தான் பெண்களை கவர முடியும். அது தான் பெண்களுக்கு முடியும் என்று கூறிய அவர் முதலில் உங்கள் பார்ட்னருக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்க வேண்டும். அதுதான் காதலின் சரியான வெளிப்பாடாக இருக்கும்.

அப்படி கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டால் அதனை அடுத்து லிப் லாக் கிஸ் கொடுங்க என்று ஓபனாக சொல்லி இருப்பதோடு அப்படி செய்வது உங்கள் அன்பை வெளிப்படுத்தக் கூடிய வகையில் இருக்கும் என்பதை உறுதிபட தெரிவித்திருக்கிறார்.

 கூச்சமே இல்லாமல் கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..

இதனை அடுத்து நீங்கள் டேட்டிங் செல்வதற்கு முன்பு உங்கள் பார்ட்னர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டு போக வேண்டும் என்று கூறியதோடு நிற்காமல் இந்த விஷயத்தை சந்தேகம் வந்தால் தயங்காமல் தன்னிடம் பேசவும் கேட்டிருக்கிறார்.

இந்நிலையில் இது போன்ற விவகாரமான விஷயங்களை ஓபன் ஆக பேசி இருக்கும் இந்த வீடியோவானது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி நெட்டிசன்கள் அனைவரும் என்ன வேலை இது பணத்திற்காக இப்படியா? என்று பல்வேறு வகைகளில் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version