அது கடினமா இருக்கணும்.. இது பெருசா இருக்கணும்.. ரேஷ்மா பசுபுலேட்டி சொன்னதை கேட்டீங்களா..?

தமிழ் சினிமாவிலும், சீரியலிலும் கலக்கி வருபவர் ரேஷ்மா பசுப்புலெட்டி. நடிகர் பாபி சிம்ஹாவுக்கு அக்கா முறையான ரேஷ்மா முதன்முதலில் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார்.

பின்னர் 2015ல் தமிழில் வெளியான மசாலா படம் மூலமாக திரை உலகில் அறிமுகம் ஆனார். பின்னர் 2016ல் வெளியான விஷ்ணு விஷால் நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே மேலும் பிரபலமானார்.

கோ 2, மணல் கயிறு 2, திரைக்கு வராத கதை என பல படங்களில் நடித்தவர் 2019ம் ஆண்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தொடரிலும் கலந்து கொண்டார்.

 

சீரியலில் வாய்ப்பு:

அது அவருக்கு அதே விஜய் டிவியில் 2020 முதல் ஒளிபரப்பாக தொடங்கிய ‘பாக்கியலெட்சுமி’ தொடரில் நடிக்க வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. அதுமுதல் இன்று வரை பாக்கியலெட்சுமி சீரியலில் தொடர்ந்து நடித்து வரும் ரேஷ்மாவுக்கு குடும்ப ஆடியன்ஸ் அதிகரித்துள்ளனர்.

சீரியலில் நடித்து குடும்ப ஆடியன்ஸை ஈர்த்தாலும், மறுபக்கம் இளைஞர்களையும் கவர ரேஷ்மா தவறவில்லை. பெரியவர்களுக்கு டிவி சீரியல் என்றால், இளைஞர்களுக்கு இன்ஸ்டாகிராம்.

அப்படியான இன்ஸ்டாகிராமிலே கவர்ச்சியான பல புகைப்படங்களை பதிவேற்றுவது ரேஷ்மா பசுப்புலெட்டியின் வாடிக்கை. ரேஷ்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 15 லட்சத்திற்கும் அதிகமானோர் ஃபாலோவ் செய்து வருகின்றனர்.

இணையத்தில் வரவேற்பு:

அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் செய்வது, புகைப்படங்களை பதிவேற்றுவது என ரேஷ்மா தொடர்ந்து ஆக்டீவாக இருந்து வருகிறார். அவ்வப்போது சில கிளுகிளுப்பான போட்டோஷூட் புகைப்படங்களையும் அவர் வெளியிடுவார்.

சமீபத்தில் அவ்வாறாக புகைப்படம் ஒன்றை பதிவிட்ட ரேஷ்மா பசுப்புலெட்டி “செய்யும் வேலை கடினமாக இருக்கணும்.. கனவில் எப்போதும் பெருசா இருக்கணும்” என கேப்ஷன் வைத்துள்ளார்.

அந்த கேப்ஷனுடன் வெள்ளை, ரோஸ் காம்பினேஷனிலான புடவை கட்டிய ஃபோட்டோவை ரேஷ்மா பசுபுலெட்டி வெளியிட்டுள்ள நிலையில், அந்த கேப்ஷனின் கமெண்டில் பலரும் ரேஷ்மாவின் அழகை புகழ்ந்து கமெண்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version