பெண்கள் அந்த உறுப்பில் இந்த தவறை செய்யக்கூடாது.. ரேஷ்மா பசுபுலேட்டி ஓப்பன் டாக்..!

சின்னத்திரை பெரிய திரை என்று இரண்டிலும் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி ஒரு மிகச் சிறந்த தொலைக்காட்சி தொகுப்பாளினியாக வலம் வந்தவர்.

இவர் ஆரம்ப நாட்களில் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்ததோடு மட்டுமல்லாமல் மீடு இயக்கத்தின் ஆதரவாளராக இருந்ததை அடுத்து விஜய் டிவியில் பிரம்மாண்டமான முறையில் நடக்கும் பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்து கொண்டு தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி..

நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினரான இவர் இவரது தந்தை தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.மேலும் தமிழ் மற்றும் மலையாள மொழி படமான கேர்ள்ஸ் படத்தில் இவர் பணி புரிந்திருக்கிறார்.

அத்துடன் இவர் மசாலா படம், இனிமையான நாட்கள், கேர்ள்ஸ், திரைக்கு வராத கதை, கோ 2, மணல் கயிறு 2 போன்ற திரைப்படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.

சினிமாவில் போதுமான வாய்ப்புகள் தொடர்ந்து வருவது தடை பட்டதை அடுத்து இவர் சின்னத்திரை சீரியல்களில் களம் இறங்கினார்.

அந்த வரிசையில் மரகத வீணை, உயிர்மெய், என் இனிய தோழியே, சுந்தரகாண்டம், ஆண்டாள் அழகர், வம்சம் போன்ற சீரியலில் கலக்கி இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி வெளியிடுகின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு கறி விருந்து வைப்பது போலவும் அவர்கள் ரசனைக்கு ஏற்றபடியும் இருக்கும்.

இவர் சமூக வலைத்தளங்களில் மட்டுமல்லாமல் சில பேட்டிகளிலும் சில தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் பங்கேற்று வருவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

அந்த வகையில் இவர் தற்போது அளித்திருக்கும் பேட்டியில் பெண்களின் அந்தரங்கத்தை எப்படி மெயின்டைன் பண்ண வேண்டும் என்பதை பகிர்ந்து இருக்கிறார்.

பெண்கள் அந்த உறுப்பில் இந்த தவறை செய்யக்கூடாது..

இந்த பேட்டியானது மெர்சி பிளஸ் அந்தரங்கம் அல்டிமேட் சீசன் இரண்டில் வெளிவந்துள்ளது. இந்த பேட்டியில் அவர் பேசும் போது பெண்களின் செல்ப் கேர் நாம் நினைப்பது போல இல்லை மிகவும் குறைவாகத்தான் அது பற்றிய விழிப்புணர்வு பெண்களிடம் காணப்படுகிறது என்று சொன்னார்.

பெரும்பாலான பெண்கள் தன் முக அழகை பராமரிப்பது போலவே வெர்ஜினல் ஹெல்த்தை பராமரிப்பது மிகவும் அவசியம் என்று சொல்லி இருக்கிறார். மேலும் பெண் உறுப்பில் அதிக அளவு ஈரப்பதம் இருப்பதால் தனிப்பட்ட சுகாதாரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த உறுப்பில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்தைகளால் ஏற்படக்கூடிய தொற்றுகள் பெண்ணுறுப்பை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் சிறுநீரகத்தை கூட பாதிக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தும்.

ஓபன் டாக்கால் பரபரப்பு..

மேலும் அதிக குளிர் மற்றும் அதிக வெப்பம் இவற்றால் பெண் உறுப்பில் ஈரப்பதம் அதிகரிக்கலாம். இதன் மூலம் தொற்றுகள் ஏற்பட்டு அந்த பகுதியில் அரிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

அப்படி நீங்கள் அந்த பெண்ணுறுப்பை பாதுகாக்க எப்போதுமே அதை உலர்ந்த தன்மையோடு வைத்துக் கொள்ள வேண்டும் இதற்காக நீங்கள் ஈரமான உடைகளை அணியக்கூடாது.

குறிப்பாக தளர்ந்த பருத்தி ஆடைகளை அணிவதோடு டைட்டான ஆடைகளை தவிர்ப்பது இது போன்றவை தொற்றுகள் ஏற்பட வாய்ப்பினை அளிக்காது. மேலும் தீமை அளிக்கும் பாக்டீரியாக்கள் அந்த பகுதியில் கேடுகள் விளைவிக்காமல் இருப்ப அடிக்கடி அந்தப் பகுதியை சுத்தப்படுத்துவது மிகவும் சிறப்பானது.

நீங்கள் மார்க்கெட்டில் கிடைக்கக்கூடிய வேதிப்பொருட்கள் நிறைந்த எந்த ஒன்றையும் பயன்படுத்தக் கூடாது. மேலும் சுடுநீர் கொண்டு கழுவுவதால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாது.

அத்துடன் சத்தான உணவினை உண்பது மிகவும் அவசியமான ஒன்று மாதவிடாய் சமயத்தில் காரமான மசாலா பொருட்கள் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது கூடுதல் சிறப்பானது.

மாதவிடாய் காலங்களில் புரோபயாட்டிக் உணவுகளை அதிகளவு உணவு சேர்த்துக் கொள்வதின் மூலம் வெர்ஜினாவில் அமிலத்தன்மை ஏற்படாமல் இருக்கும்.. மேலும் வெர்ஜினாவில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க சுடுநீரில் உப்பு கலந்து கழுவுவது அவசியம்.

மேலும் துர்நாற்றத்தை தடுப்பதற்காக வேதிப்பொருட்கள் நிறைந்த சோப்புகள் மற்றும் டியோட ரெண்டுகளை பயன்படுத்துவது மிகவும் தவறான ஒன்று. அப்படி பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கு அந்தப் பகுதியில் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளது என்று சொன்னார்.

மேலும் திருமணம் எனும் பெண்கள் பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்வதின் மூலம் அந்தப் பகுதி பாதுகாக்கப்படும். அந்த சமயத்தில் உங்கள் பார்ட்னரை காண்டம் பயன்படுத்த சொல்வது மிகவும் முக்கியமானது என்று சொல்லி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version