இதுக்கு முன்னாடி யாரு கூட செ** வச்சிருக்கன்னு கேட்டேன்.. ரேஷ்மா பசுபுலேட்டி ஓப்பன் டாக்..!

தமிழில் சின்னத்திரை மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. பொதுவாக முன்பெல்லாம் சின்ன திரையில் அறிமுகமாகும் நடிகைகள் வெள்ளி திரைக்கு வருவது என்பது கடினமான ஒரு விஷயமாக இருக்கும்.

ஆனால் இப்போதெல்லாம் வெள்ளித்திரைக்கு அறிமுகம் ஆவதற்கு அடித்தளமாக சின்னத்திரைதான் இருக்கிறது. சிவகார்த்திகேயன், சந்தானம் மாதிரியான நடிகர்கள் சின்ன திரையில் இருந்து பிரபலமாகி அதன் மூலம் சினிமாவிற்கு சென்றதிலிருந்து தற்சமயம் நடிகைகளும் அந்த ஃபார்முலாவை பின்பற்ற துவங்கியிருக்கின்றனர்.

அந்த வகையில் ரேஷ்மாவும் நாடகங்களில் நடித்தாலும் தொடர்ந்து திரைப்படங்களிலும் வரவேற்பை பெற்று வருகிறார். 2015 ஆம் ஆண்டு மசாலா படம் என்கிற திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

திரைப்பட வாய்ப்பு:

ஆனால் திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. தொடர்ந்து வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் இவர் நடித்த புஷ்பா என்கிற கதாபாத்திரம்தான் பெரிதாக வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமானார் ரேஷ்மா ஆனால் இதற்கெல்லாம் முன்பே 2009 ஆம் ஆண்டு சீரியல்களில் இவர் அறிமுகமாகிவிட்டார். தெலுங்கில் லவ் என்கிற ஒரு சீரியல் மூலம் முதன் முதலாக அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழில் வாணி ராணி என்கிற சீரியலில் அறிமுகமானார் ரேஷ்மா தொடர்ந்து சன் டிவியில் நிறைய சீரியல்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பாக்கியலட்சுமி சீதாராமன் மாதிரியான சீரியல்கள் தற்சமயம் அதிக பிரபலமான சீரியல்களாக பார்க்கப்படுகின்றன.

முதல் டேட்:

இந்த நிலையில் தான் வாழ்க்கையில் அனுபவித்த முதல் டேட் குறித்து கூறியுள்ளார் ரேஷ்மா. அதில் அவர் கூறும்போது “எனக்கு 18 வயது இருக்கும்போது ஒரு நபர் மூன்று மாதங்களாக தினசரி என்னை சந்தித்து எனக்கு பூ கொடுத்து வந்தார்.

அந்த நபர் ஒரு அமெரிக்கன் என்பதால் அவரை சந்திக்க எனது மனம் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் மூன்று மாதங்களாக அவர் முயற்சி செய்ததால் அவரை சந்திக்க சென்றேன். அப்போது முதல் சந்திப்பில் எங்களுக்குள் நல்ல உறவு உண்டானது.

பிறகு இருமுறை டேட் செய்தோம் என்கிறார் ரேஷ்மா. ஆனால் முதல் முறை அவருடன் டேட் செய்யும்போது நிறைய கேள்விகள் கேட்டு அவரை பயமுறுத்திவிட்டேன். உங்களுக்கு எத்தனை கேர்ள் ப்ரெண்ட். எத்தனை பெண்களோடு டேட் செய்துள்ளீர்கள். எத்தனை பெண்களோடு உடலுறவு வைத்தீர்கள் என்றெல்லாம் கேட்டேன். இதனால் அந்த நபர் ஒரு வாரத்திற்கு எனக்கு போன் செய்யவில்லை என்கிறார் ரேஷ்மா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version