ஆண்ட்டி என்று அழைத்த நபருக்கு ரேஷ்மா பசுபுலேட்டி கொடுத்த தண்டனை.. விளாசும் ரசிகர்கள்..!

மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கி அதன் பிறகு தொகுப்பாளினியாக மீடியா உலகில் நுழைந்தவர் தான் ரேஷ்மா பசுபுலேட்டி.

தொலைக்காட்சி தொகுப்பாளினியாகப் பணியாற்றி வந்த இவருக்கு திரைப்படங்களின் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ரேஷ்மா பசுபுலேட்டி :

இவரது தந்தை பிரசாத் பசுபுலேட்டி பிரபல தெலுங்கு சினிமாவின் தயாரிப்பாளராக இருந்து வந்தார். அவரது தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்.

அந்த படத்தில் புஷ்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்து காமெடி நடிகையாக ரேஷ்மா தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

காமெடி கலந்து கலகலப்பான அந்த காமெடி காட்சி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக அந்த காமெடியில் சூரிக்கு ஜோடியாக ரேஷ்மா பசுபுலேட்டி நடித்திருந்தார்.

இன்று வரை அவரின் அடையாளமாக அந்த காட்சி பார்க்கப்பட்டு வருகிறது. இதனுடையே அவர் சீரியல்களிலும் தொடர்ச்சியாக நடித்து வந்தார் .

குறிப்பாக வாணி ராணி, மரகத வீணை, உயிர்மெய், ஆண்டால் அழகர் ,வம்சம் உள்ளிட்ட பல்வேறு செய்திகளில் அவர் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாகவும் பார்க்கப்பட்டார்.

இதனிடையே திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க கோ 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். பெரிதாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காதால் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

தனது கிளாமரான புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சி போட்டோஸ் ஹாட்டான வீடியோ உள்ளிட்டவற்றை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

திருமணம், விவாகரத்து:

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான பாபி சிம்ஹாவின் நெருங்கிய உறவுக்கார பெண்ணான ரேஷ்மா திரைப்பட வாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்காததால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

ரேஷ்மாவின் முதல் திருமணம் பெற்றோர்கள் பார்த்து வைத்து பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

ஆனால் சில வருடங்களில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள் .

அதன் பிறகு அமெரிக்கா சென்று செட்டிலான நடிகை ரேஷ்மா பசுபலேடி அங்கு பாக்ஸர் ஒருவரை காதலித்து மீண்டும் அவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் .

அவர்களுக்கு பிறந்தது தான் ஒரு மகன் மகனுடன் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த நிலையில் தன்னுடைய இரண்டாவது கணவர் தகாத உறவு கொண்டிருந்ததாக தெரியவர பின்னர் அவருடன் சண்டை இட்டு விவாகரத்து செய்து அவரையும் பிரிந்து விட்டார்.

பின்னர் மீண்டும் சென்னைக்கு வந்து இங்கே திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிய ரேஷ்மா இங்கு பிரபலமாகிவிட்டார்.

கவர்ச்சி குறைவில்லாமல் காட்டும் ரேஷ்மா:

தனிமையில் தான் வசித்து வருகிறார் ரேஷ்மா. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக அவர் வெளியிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் வீடியோக்களுக்கு வரும் மோசமான கமெண்ட்கள் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

தொகுப்பாளர் ரேஷ்மாவிடம் உங்களை ஆண்டி கூப்பிடுபவர்களுக்கு நீங்கள் என்ன ரிப்ளை கொடுக்க விரும்புகிறீர்கள் என கேட்டதற்கு,

பொதுவாக இது போன்ற கமெண்ட்ஸ்களை நான் கண்டுகொள்வதே கிடையாது. அதை எல்லாம் அப்படியே அப்புறம் தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருப்பேன் என கூறினார்.

ஆண்டின்னு கூப்பிட்டவருக்கு பளார் அடி:

பின்னர் அருகில் இருந்தவரை நீ ஆண்டின்னு கூப்பிடுடா பார்க்கலாம் என்று கேட்டவுடன் அவர் ஆன்டி என்று அழைக்க ரேஷ்மா பளார் பளார் என அவர் அவரது கன்னத்திலே அறைந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாக இப்படித்தான் நான் கண்டு கொள்வதில்லை என கூறி எனக்கு. நக்கலாக பதில் கூறினார் ரேஷ்மா. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இதோ அந்த வீடியோ:

https://x.com/FilmFoodFunFact/status/1791398877410861516

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version