ஆண் துணையில்லாமல் குழந்தை பெற்றெடுத்த நடிகை ரேவதியின் கண்ணீர் கதை..!

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் வந்து போனாலும் சில நடிைககள் மட்டும் எப்போதுமே நடிப்பில், உதாரணமாக சொல்லப்படுவார்கள். உதாரணமாக பானுமதி, பத்மினி, ரேவதி, நதியா, சுகாசினி, ஊர்வசி போன்றவர்களை குறிப்பிட்டு சொல்ல காரணம், அவர்கள் கவர்ச்சி காட்டி ஜெயித்தவர்கள் அல்ல. நடிப்பை மட்டுமே நம்பி, தன் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்கள்.

ஆஷா என்கிற ரேவதி

ஆஷா என்ற இயற்பெயர் கொண்டவர் ரேவதி. அவரை மண்வாசனை என்ற படம் மூலம் 1983ம் ஆண்டில் ரேவதி என்ற பெயரில் பாரதிராஜா அறிமுகம் செய்தார். முதல் படமே மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. தொடர்ந்து இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். நடிகை, டைரக்டர், சமூக ஆர்வலர் என ரேவதி பன்முக தன்மை கொண்டவராகஇருந்து வருகிறார்.

சுரேஷ் மேனன் காதல் திருமணம்

ரேவதி, கடந்த 1986ம் ஆண்டில் திரைப்பட ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் புதிய முகம் என்ற படத்தில் நடித்த போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. பிறகு இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். சுரேஷ் மேனன் இப்போது படங்களில் நடித்து வருகிறார். சூர்யா ஹீரோவாக நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சிபிஐ அதிகாரியாக சுரேஷ் மேனன் நடித்திருப்பார்.

27 ஆண்டுகால மண வாழ்க்கை

சுரேஷ் மேனன் – ரேவதி இருவரும் 27 ஆண்டுகள் குடும்ப வாழ்வில் இணைந்து சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. அதற்கு முக்கிய காரணம், அவர்களுக்கு 27 ஆண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் அமையவில்லை.

இதையடுத்து கடந்த 2013ம் ஆண்டில் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றுக்கொண்டனர். விவாகரத்துக்கு பிறகு மீண்டும் சினிமாவில் பழையபடி ஆர்வத்துடன் ரேவதி நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இந்நிலையில் சுரேஷ் மேனன் இறந்துபோய்விட்டதாக ஒரு தகவல் பரவிய நிலையில், நான் உயிருடன்தான் இருக்கிறேன் என நீண்ட நாட்களுக்கு பின் மீடியா முன் தோன்றினார் சுரேஷ் மேனன். அதன்பிறகு அந்த வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைத்தது.

குழந்தையில்லை

ரேவதி சுரேஷ் மேனன் மீதும், சுரேஷ் மேனன் ரேவதி மீதும் அளவு கடந்த பாசம், காதல், நட்பு கொண்டிருந்த நிலையில், அவர்களது பிரிவுக்கு முக்கிய காரணமே அவர்களுக்கு குழந்தையில்லை என்ற பிரச்னைதான்.

இதையும் படியுங்கள்: 40 நாள் வனவாசம்.. படுக்கையில் கீர்த்தி சுரேஷ் யாருடன் படுத்துள்ளார் பாத்தீங்களா..?

டெஸ்ட் டியூப் குழந்தை

இந்நிலையில் குழந்தை பேறுக்கான பலவிதமான மருத்துவ சிகிச்சைகளை ஆரம்பத்தில் இருந்தே மேற்கொண்டிருந்த நிலையில், நடிகை ரேவதி ஒரு கட்டத்தில் தனக்கு குழந்தை அவசியம் தேவை. எனது இறுதிகாலத்தில் அப்படி ஒரு துணை, வாரிசு தனக்கு அவசியம் என்று உணர்ந்த ரேவதி, டெஸ்ட் டியூப் மருத்துவ முறையில் ஒரு பெண் குழந்தைக்கு தாயானார்.

குழந்தைக்கு 5 வயதான நிலையில், இது தத்துப் பிள்ளையல்ல. நான் பெற்றெடுத்த பிள்ளை மேகா என ஊடகங்களின் முன் ரேவதி உறுதிபடுத்தினார். ஆனால் குழந்தையின் தந்தை யார் என்பதை அவர் இன்னும் அறிவிக்கவில்லை.

பேபி மேகாவுக்கு அப்பா கிடைப்பாரா?

ஆனால் மீண்டும் ரேவதியுடன் இணைந்து வாழ சுரேஷ் மேனன், சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் மீண்டும் அவர்கள் இணைவார்களா, டெஸ்ட் டியூப் பேபி மேகாவுக்கு அம்மா ரேவதி கிடைத்தது போல, அப்பா சுரேஷ் மேனன் கிடைப்பாரா என்பதுதான் இப்போதைய பெரிய கேள்வியாக உள்ளது.

இதையும் படியுங்கள்: சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றிய நடிகை ஸ்வேதாவா இது..? பதின்ம வயசில் பலான போஸ்..!

கண்ணீர் கதை

ஆண் துணையில்லாமல் குழந்தை பெற்றெடுத்த நடிகை ரேவதியின் கண்ணீர் கதையை கேட்ட ரசிகர்கள், இவ்வளவு புகழ் பெற்ற நடிகை ரேவதிக்கு இப்படி ஒரு சோதனையா என உச் கொட்டி வருத்தப்படுகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version