அரிசி மாவில் முக ஜொலி ஜொலிப்பா?

அரிசி மாவை பயன்படுத்தி முக அழகை அதிகரிக்க கூடிய வழிகளை இனி காணலாம்.

குறிப்பு 1

மூன்று சிட்டிகை அரிசி மாவு, ஒரு சிட்டிகை மஞ்சள் இவற்றை நன்றாகக் கலந்து எடுத்து முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள கருமை நிறம் மறையும்.முகம் பளபளப்பாகும்.

குறிப்பு 2

ஒரு சிறிய பௌலில் அரிசி மாவு, சிறிதளவு தயிர் சிறிதளவு இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில்  நன்றாக தேய்க்க வேண்டும் பின்னர் இதனை அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளபளப்பாகும்.

குறிப்பு 3

அரிசி மாவு 2 ஸ்பூன், சிறிதளவு  தேன் மற்றும் கற்றாழையின் சோற்றுப் பகுதியை ஒன்றாக பிசைந்து சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் நன்கு தேய்த்து விடவும். இந்தக் கலவையை குறைந்தது ஒரு மணி நேரம் முகத்தில் பூசி வைத்துக்கொண்டால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் கண்ணுக்கு கீழ் இருக்கும் கருவளையம் போன்றவை அனைத்தும் நீங்க உதவி செய்யும். ஒரு மணி நேரம் கழித்த பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும் கழுவியபின் சோப்பினை பயன்படுத்தக்கூடாது.

குறிப்பு 4

அரிசி மாவு 2 ஸ்பூன், வாழைப்பழத் துண்டுகள் 2 இவற்றை நன்றாக பிசைந்து முகத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து இந்த கலவை குறைந்தது அரைமணி நேரமாவது இருக்க வேண்டும். இதன் மூலம் முகத்தில் எண்ணெய் வடிதல் மற்றும் சருமம் வறண்டு போகுதல் நீக்கப்படும்.

குறிப்பு 5

காய்ச்சிய பசும்பாலுடன் இரண்டு ஸ்பூன் அரிசி பொடியை சேர்த்து நன்றாக கலந்து இளம் சூட்டில் முகத்தில் தேய்த்து விடவும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும் கரும்புள்ளிகள், பருக்கள் ஏற்படுவது தடுக்கப்படும் இந்த கலவையை அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடவும் இதனை தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் உங்கள் முகம் பளபளக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …