அந்தி மயங்கும் நேரத்தில் ஏதாவது குறுந் தீனிகளையோ அல்லது லைட்டாக ஒரு டிபனை சாப்பிட்டு அரை டம்ளர் காபியை குடிக்க வேண்டும் என்று அனைவரும் நினைப்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வரிசையில் எண்ணெய் பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்த்து உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய அரிசி உப்புமா – வை 10 நிமிடத்தில் எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
புழுங்கரிசி உப்புமா செய்ய தேவையான பொருட்கள்:
1.புழுங்கல் அரிசி 200 கிராம்
2.சிறிதளவு சின்ன வெங்காயம்
3.பச்சை மிளகாய் காரத்துக்கு ஏற்றது போல்
4.கால் கப் தேங்காய் துருவல்
5.தேவையான அளவு எண்ணெய்
6.ஒரு சிறு துண்டு இஞ்சி பொடி பொடியாக நறுக்கியது
7.கடுகு சிறிதளவு 8.உளுத்தம் பருப்பு சிறிதளவு
9.கருவேப்பிலை சிறிதளவு
10.உப்பு
செய்முறை
முதலில் புழுங்கரிசி உப்புமா செய்வதற்கு 200 கிராம் புழுங்கல் அரிசியை வானொலியில் போட்டு லேசாக வறுத்து பின் பொன் நிறம் வந்த பின் எடுத்து பின் அதை சூடு ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மீண்டும் வாணலிய அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெயை ஊற்றி தாளிக்க கடுகு உளுத்தம் பருப்பு ஆகியவற்றைப் போன்று நன்கு வெடிக்க விடவும் பிறகு அதில் பொடியாக வெட்டிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு அரிசி பொடி வேகும் அளவுக்கு தண்ணீரை விட்டு தேவையான அளவு உப்பை போடவும் தண்ணீர் சற்று கொதித்து வரும் வேளையில் மாவை கொட்டி கட்டி சேராமல் கிளற வேண்டும்.
இதனை அடுத்து அரிசி மாவு நன்கு வெந்து உதிரி உதிராக வருவதற்காக மேலே சிறிதளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி கிளறவும். உப்புமா பதத்திற்கு வந்தவுடன் துருவி வைத்திருக்கும் கால் கப் தேங்காயை அதனுடன் சேர்த்து நன்கு கிளறிய பின் கருவேப்பிலையை சேர்த்து விடுங்கள்.
ஓரிரு நிமிடங்கள் முடியை போட்டு மூடி விட்டு அடுப்பை அணைத்து விடவும். இப்போது சூடான சுவையான மாலை நேர சிற்றுண்டி யான அரிசி உப்புமா ரெடி.