ரிஹானாவை படுக்கைக்கு அழைத்த நடிகர் இவர் தான்..! உண்மையை உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது என்பது மிக மிக சாதாரணமாகிவிட்டது. இப்போது அதற்கு அட்ஜஸ்ட்மென்ட் என்ற ஒரு வார்த்தையை சொல்லி கமுக்கமாக அதை செய்து வருகின்றனர்.

இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையில் விவகாரத்தில் சிக்காத நடிகைகளே இன்று இல்லை என்று சொல்லும் அளவுக்கு, தமிழ் சினிமா, சீரியல் போன்றவை மாறிக்கொண்டிருக்கிறது.

ரிஹானா

சீரியலில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரிஹானா. இவர் துணிச்சலாக பல கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடியவர். சமீபத்தில் ஒரு நடிகர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறியிருந்தார்.

அது யார் என்று அவர் கூறாத நிலையிலும், அவர் இந்த ஹீரோ தான் என்று உண்மையைப் போட்டு உடைத்து இருக்கிறார் ஒரு பிரபல பத்திரிகையாளர்.

ஆனந்தராகம்

சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரிஹானா. ஜீ தமிழில் ஒளிபரப்பான மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலிலும் ரிஹானா நடித்திருக்கிறார்.

அண்மையில் இவர் யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் பங்கேற்றார். அப்போது, என்னுடைய முதல் திருமணம் ஏமாற்றத்தில் முடிந்து போனது, அனைவருக்குமே தெரியும். சமீபத்தில் தான் எனக்கு விவாகரத்தானது. அது தொடர்பான ஆவணங்கள் இப்போது என் கைக்கு கிடைத்திருக்கிறது.

2வது திருமணம்

எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். எனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. விதவையானாலும், விவாகரத்து ஆன பெண்ணாக இருந்தாலும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் அவர்களை இந்த சமுதாயம் தப்பாகத் தான் பேசுகிறது, பார்க்கிறது.

ஆனால் கணவன் இல்லாமல் வாழும் பெண்ணுக்கு பல வகையிலும் பிரச்சனைகளும், துன்பங்களும் வரும். அக்கம்பக்கத்தில் இருக்கும் ஆணுடன் எதார்த்தமாக பேசினால் கூட மற்றவர்கள் தவறாக பார்ப்பார்கள்.

அதனால் நிச்சயம் ரெண்டாவது திருமணம் செய்து கொள்வேன். அந்த திருமணம் அனைவருக்கும் சொல்லி தான் செய்து கொள்வேன் என்று கூறினார்.

போன் நம்பர் கொடுத்தேன்

தொடர்ந்து பேசிய ரிஹானா, ஒரு பெரிய நடிகரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அப்போது என்னை குறிப்பிட்டு, நீங்கள் நல்லா நடிச்சீங்க என்று சொல்லி என் போன் நம்பர் கேட்டார். நானும் கொடுத்தேன்.

நான் பிளாக் பண்ணிவிட்டேன்

ஆனால் அதைச் தொடர்ந்து, அவர் மெசேஜ் பண்ணிக்கொண்டே இருந்தார். அவர் பேசும்போதே நான் புரிந்து கொண்டேன். ஏதோ தப்பாக இருக்கிறது என்று. அதனால் அவரை நான் பிளாக் பண்ணிவிட்டேன் என்று ரிஹானா கூறி இருந்தார். ஆனால் அந்த நடிகர் யார் என்று அவர் கூறவில்லை.

இந்நிலையில் பத்திரிகையாளர் வித்தகன் சேகர் தனது யூடியூப் பக்கத்தில் கூறிய போது, நடிகை ரிஹானா ஒரு நடிகர் தன்னை தப்பாக அழைத்தார் என்று கூறியிருந்தார். அந்த நடிகர் யார் என்று அவர் சொல்லவில்லை.

கண்ணியமான நடிகர் மகன்

அவர் ஒரு பெரிய நடிகர்தான். அந்த ஹீரோ யார் என்றால், ஒருவனுக்கு ஒருத்தி என்று சினிமாவில் கண்ணியத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிற நடிகரின் மகன் தான் என்று ஆராய்ந்து பார்த்ததில், தெரிய வந்ததாக கூறியிருக்கிறார்.

ரிஹானாவை படுக்கைக்கு அழைத்த நடிகர் கண்ணியமான நடிகரின் மகன் தான் என்று உண்மையை உடைத்திருக்கிறார் பிரபல பத்திரிகையாளர் வித்தகன் சேகர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version