பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..! குவியும் வாழ்த்துக்கள்…!

சின்ன திரையில் தொடர்ந்து பிரபலங்களை இன்னும் அதிகமாக பிரபலமாகி வரும் ஒரு தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி தான். தொலைக்காட்சி சேனல்களுக்கு இடையே நடைபெறும் போட்டிகளைப் பொறுத்தவரை ஜீ தமிழ், விஜய் டிவி மற்றும் சன் டிவி இந்த மூன்று தொலைக்காட்சியை நிறுவனங்களுக்கிடையேதான் போட்டிகள் அதிகமாக இருந்து வருகிறது.

இவர்கள் மூவருமே தமிழ் சீரியல்களை வெளியிட்டு வரும் தொலைக்காட்சிகளில் முக்கியமான தொலைக்காட்சிகளாக இருந்து வருகின்றனர். ஆனாலும் ஜீ தமிழிலோ அல்லது சன் டிவியிலோ நடிக்கும் நடிகைகள் அவ்வளவு பிரபலமாவதில்லை.

ஆனால் விஜய் டிவியில் நடிக்கும் நடிகைகளுக்கு மட்டும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதற்கு காரணம் தொடர்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது விஜய் டிவி.

விஜய் தொலைக்காட்சியின் பிரபலம்:

வெளிநாட்டில் நடக்கும் பல நிகழ்ச்சிகளை பார்த்து அதைப்போலவே தமிழ் தொலைக்காட்சிகளில் புதுப்புது நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்கிறது விஜய் டிவி. அப்படியாக விஜய் டிவி மூலமாக ஓரளவு பிரபலத்தை பெற்றவர்தான் நடிகை ரித்திகா.

பாக்கியலட்சுமி தொடர் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ஒரு தொடராகும். அதிகபட்சம் விஜய் டிவி தொடர் என்று யாரிடம் கூறினாலும் அவர்களுக்கு நினைவுக்கு வரும் இரண்டு தொடர்கள் உள்ளன.

அதில் ஒன்று பாக்கியலட்சுமி இன்னொன்று பாரதி கண்ணம்மா. இவை இரண்டும் மிக முக்கியமான தொடர்கள் என்று கூறலாம். இந்த தொடரில் அமிர்தாவாக முதலில் நடித்து வந்தவர் நடிகை ரித்திகா. க்யூட்டான இவரது ஸ்மைலை பார்த்து பலரும் இவருக்கு ரசிகர் ஆனார்கள்.

ரித்திகாவிற்கு வரவேற்பு:

அதற்குப் பிறகு குக் வித் கோமாளியில் பங்கேற்றதன் மூலமாக இவருக்கு ரசிக்கப்பட்டாளம் என்பது அதிகரித்தது. ஏனெனில் சீரியல் ஆடியன்ஸை தாண்டி அதிகப்படியான மக்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி இருப்பதால் இதன் மூலம் அதிக பிரபலமானார் ரித்திகா.

திருமணமான ரித்திகா கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் கர்ப்பமாக இருப்பதை சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்சமயம் அவருடைய கணவருடன் சேர்ந்து அழகான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

அவருடைய கணவருடன் தனது கர்ப்பமான வயிறு பெரிதானது தெரியும் அளவிற்கு அந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் ரித்திகா இதனை அடுத்து ரித்திகாவிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version