விக்ரம் இப்படி செய்வார்ன்னு நான் நெனச்சி பாக்கல.. ரிது வர்மா அதிர்ச்சி..!

வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழும் ரிது வர்மா இவர் சமீப காலமாக அதிகளவு கிசுகிசுகளில் சிக்கி வருகிறார். தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய இவர் சமீபத்தில் பேசிய பேட்டியின் பதிவினை இந்த பதிவில் விரிவாக காணலாம்.

நடிகர் விக்ரமா இப்படி..

 

உலகநாயகன் கமலஹாசனுக்கு ஈடாக நடிகர் விக்ரம் அவர்களை நாம் கூறலாம். அந்தளவு சினிமாக்காக தன்னை அர்ப்பணிக்க கூடிய அற்புதக் கலைஞனாக திகழ்கிறார்.

ஆரம்ப நாட்களில் இவரது திரைப்படங்கள் பெரிய வெற்றியை தரவில்லை என்றாலும் சேது திரைப்படத்திற்கு பிறகு திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

அண்மையில் இவர் நடிப்பில் வெளி வந்த பொன்னியின் செல்வன் பகுதி ஒன்று மற்றும் இரண்டு கரிகால சோழனாக நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தார்.

இதனை அடுத்து தற்போது தங்கலான் படத்தில் தனக்கே உரிய பாணியில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் விக்ரம் பற்றி சில அதிர்ச்சிகரமான விஷயங்களை நடிகை ரிது வர்மா அவர்கள் பகிர்ந்து இருப்பது ரசிகர்களின் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அதிர்ச்சியான ரிது வர்மா..

 

நடிகை ரிது வர்மா சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளி வந்த மார்க் ஆண்டனி படத்தில் கதாநாயகியாக நடித்து பலரது உள்ளத்திலும் இடம் பிடித்து விட்டார்.

இந்நிலையில் திரையில் பிரம்மாண்டமாக வெளி வர இருக்கும் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் ரிது வர்மா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பானது அண்மையில் குன்னூர் பகுதிகளில் நடந்துள்ளது. அப்போது நிஜமாகவே நான் கௌதம் படத்தில் நடிக்கிறேனா என்ற சந்தேகம் ரிது வர்மாவிற்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் இவர் விக்ரம் படத்தில் நடிப்பது இவருக்கே வியப்பாக இருந்தது என்ற கருத்தை கூறி இருப்பதை அடுத்து விக்ரம் முன் எப்படி நடித்தார் என்பது தற்போது வரை பிரம்மையாகவே இருப்பதாக கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் விக்ரம் படத்தில் நடிக்கும் போது நிஜமாகவே விக்ரம் தான் இப்படி எல்லாம் செய்கிறாரா? என்றெல்லாம் பிரமித்து போனேன். அத்தோடு என்னுடைய வாழ்க்கையில் விக்ரம் முன் நடிப்பேன் என்று நான் கனவிலும் நினைத்தது கிடையாது.

இதனை நான் மிகவும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இது போல் ஒரு அனுபவம் எனக்கு இன்று வரை ஏற்பட்டதே இல்லை என்று தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.

இந்த பேச்சு தான் தற்போது வைவலாக மாறி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது. உண்மையில் நல்ல நடிகர் முன் ஒரு நடிகை நடிக்கும் போது என்ன உணர்வு தோன்றுமோ, அந்த உணர்வுதான் நடிகை ரிது வர்மாவிற்கும் ஏற்பட்டுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam