ரேடியோ ஜாக்கியாக தனது கெரியரை துவங்கி அதன் பிறகு சினிமா நடிகர் ஆனவர்தான் ஆர் ஜே பாலாஜி ரேடியோ ஜாக்கியாக இருக்கும்போது பல திரைப்படங்களையும் பல நடிகர் நடிகைகளையும் பங்கமாக கலாய்த்து விமர்சித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.
அதன் மூலம் இவரது காமெடி மக்களுக்கு தெரியவர இவர் முதன் முதலில் காமெடி நடிகராக திரைத்துறையில் அறிமுகமானார் .
ஆர். ஜெ பாலாஜி:
அதன் பிறகு இயக்குனராகவும் நடிகராகவும் தற்போது வளம் வந்து கொண்டிருக்கிறார். ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட இவர் வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான்.
கலகலப்பான பேச்சு நகைச்சுவை இதை விடாத பேச்சு இது எல்லாம் தனித்துவமான திறமையாக ஆர்.ஜே பாலாஜியிடம் பார்க்கப்பட்டது.
ஆர் ஜே வாக இருக்கும்போது வானொலியில் பல திரைப்படங்களைப் பற்றியும் விமர்சித்தும் வெளியாகும் புது படங்களை பற்றியும் படு பங்கமாக கலாய்த்து அந்த படத்திற்கு பைசா கல்லா கட்டாத அளவுக்கு செய்துவிடுவார்.
அவரது நகைச்சுவையான விமர்சனங்களுக்கு பெருவாரியான ரசிகர்கள் கூட்டம் இருந்தனர். இதனிடையே அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க கடந்த 2013 ஆம் ஆண்டு புத்தகம் எனும் திரைப்படத்தில் குரல் மட்டுமே கொடுத்து வந்தார்.
அதன் பிறகு எதிர்நீச்சல் திரைப்படத்தில் நடித்து நடிகர் ஆனார். அதன் பின்னர் தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படத்தில் கர்ணா என்ற சிறிய ரோலில் நடித்திருந்தார்.
நடிகராக ஆர்ஜே பாலாஜி:
காமெடி ரோல்களில் நடித்துக் கொண்டே சீரியஸான ரோல்களிலும் நடித்து வந்த ஆர் ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியான பிறகு ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் அவருக்கு வரவேற்பு கொடுக்கவில்லை.
இருந்தாலும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்துக் கொண்டே வருகிறார். இதனிடையே அவர் கிரிக்கெட் கமெண்ட்ராகவும் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் ஆர் ஜே பாலாஜி, மறைந்த நடிகரும் அரசியல் பிரமுகரமான ஜேகே ரித்தேஷ் என்பவர் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதாவது ஜே அதிகமாக உதவும் குணம் உடையவர். யாராவது ஒருவர் பசிக்கிறது சாப்பிடவில்லை என்று கேட்டால் அவர்களிடம் உடனே ரூ . 500 கட்டை எடுத்துக் கொடுத்து விடுவார்.
அந்த அளவுக்கு உதவும் மனம் கொண்டவர். ஒருமுறை நானும் அவரும் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தோம் அங்கு ஒரு சிறுவனுக்கு உடல்நிலை பிரச்சினை இருக்கிறது எனக்கூறி ஆபரேஷன் செய்ய வேண்டும் என அவரது பெற்றோர்கள் அழுதுக்கொண்டே கேட்டனர்.
அவர் செய்த உதவியை பார்த்து வியந்துபோனேன்:
அப்போது நான் எழுந்து அவர்களுக்கு உதவி என ஆரம்பிப்பதற்குள் உடனடியாக ரித்தீஷ் எழுந்து அந்த குழந்தையின் மருத்துவ செலவை பார்த்துக் கொள்கிறேன் என வாக்கு கொடுத்தார்.
அவர் வாக்கு கொடுத்தது மட்டுமில்லாமல் அந்த குழந்தையின் வீட்டிற்க்கே சென்று மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை செலவுகளை பார்த்துக் கொண்டார்.
பலரிடம் பணம் இருக்கிறது ஆனால் உதவி செய்ய மனம் ஒரு சிலரிடம் மட்டும்தான் இருக்கிறது. நான் ஜேகே விடும் இந்த விஷயத்தை பார்த்து மிகவும் பெருமைப்பட்டேன். என கூறி இருக்கிறார் ஆர்ஜே பாலாஜி.