கடந்த ஒரு வாரமாகவே ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார்கள் என்கிற செய்திதான் சினிமா வட்டாரத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் நடித்து வரும் டாப் நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி இவர் தனது மனைவி ஆர்த்தியை காதலித்துதான் திருமணம் செய்து கொண்டார். கார்த்தியின் தாய் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் தயாரிப்பாளராக இருந்து வருகிறார்.
ஆர்த்தியும் சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்தான் ஜெயம் ரவியோடு பழக்கம் ஏற்பட்ட பிறகு இருவரும் காதலித்தனர். ஆனால் ஆர்த்தியின் வீட்டில் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இருந்தாலும் அதையெல்லாம் மீறி ஆர்த்தி ஜெயம் ரவியை திருமணம் செய்து கொண்டார்.
விவாகரத்து பிரச்சனை:
அதற்கு பிறகு ஜெயம் ரவி நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்களை அவரது மாமியார்தான் தயாரித்து வருகிறார். சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த நிறைய திரைப்படங்கள் தோல்வியை கண்டு இருந்தன. அதுதான் இந்த விவாகரத்து பிரச்சனைக்கு காரணம் என்று ஒரு பக்கம் பேச்சு இருக்கிறது.
இன்னும் ஒரு பக்கம் ஜெயம் ரவிக்கு பொன்னியின் செல்வன் திரைப்பட படப்பிடிப்பு நடந்த பொழுது ஒரு நடிகையுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. அதனால்தான் விவாகரத்து பிரச்சினை துவங்கியிருக்கிறது என்று கூறப்படுகிறது.
ஆனால் இவையெல்லாம் ஒரு வதந்தி என்றுதான் கூற வேண்டும் இப்போது வரை அவர்கள் இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்பது தெளிவாக தெரியாத விஷயமாகவே இருக்கிறது. இந்த நிலையில் யூடியூபில் பேசி வரும் ஆர் ஜே ஷா இந்த விவகாரம் தொடர்பாக தனது கருத்தை வெளியிட்டு உள்ளார்.
யூ ட்யூப்பர் கருத்து:
அந்த கருத்துக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அவர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு ஆதரவாகவே தனது கருத்து முன் வைத்திருந்தார். அவர் தனது யூ ட்யூப் சேனலில் பேசும்பொழுது இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ஜெயம் ரவியுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை நீக்கிவிட்டார் என்றதுமே பலரும் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக பேசத் துவங்கி விட்டனர்.
ஊடகங்களும் அவ்வாறே செய்திகளை வெளியிட துவங்கி விட்டன ஆனால் அதை இன்ஸ்டாகிராமில் மேரிட் ஜெயம் ரவி என அவரது பயோவில் வைத்திருப்பதை இன்னும் அவர் மாற்றவில்லை அதை ஏன் யாரும் கவனிக்கவில்லை என்று தெரியவில்லை.
சமீபத்தில் ஜெயம் ரவியின் ஜெயம் திரைப்படம் 21 ஆண்டுகள் கடந்ததை சிறப்பிக்கும் வகையில் ஒரு பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார் ஆர்த்தி ஒருவேளை ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் இடையே உண்மையிலேயே பிரச்சனை இருந்தாலும் கூட அது அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சனை.
இருவரும் பிரிவதாக இருந்தால் அவர்களே அதை அறிவிப்பார்கள் அதை விட்டுவிட்டு தேவையில்லாமல் வீண் வதந்தியை சமூக வலைதளங்களில் யாரும் கிளப்ப வேண்டாம் என்று தனது கருத்தை முன் வைத்திருந்தார் ஆர்ஜே ஷா