“ரோட்டு கடை முட்டை தோசை..!” – உங்கள் வீட்டில நீங்களே செய்யலாம்..!

நம் வீட்டில் செய்வதை விட முட்டை தோசை ரோட்டு கடைகளில் மிகவும் சுவையாக இருக்கும். அந்த ஸ்டைலில் நீங்கள் உங்கள் வீட்டில் முட்டை தோசையை செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

 மேலும் இந்த முட்டை தோசையை பார்த்தாலே அனைவரது வாயிலும் எச்சில் கூறும். அந்த அளவு சுவையை அள்ளித் தரக்கூடிய ரோட்டு கடை முட்டை தோசையை உங்கள் வீட்டில் எப்படி செய்யலாம். அதற்கு என்னென்ன தேவை என்பதை பற்றி எந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ரோட்டுக்கடை முட்டை தோசை செய்ய தேவையான பொருட்கள்

1.முட்டை இரண்டு

2.தோசை மாவு ஒரு கப்

3.நறுக்கிய வெங்காயம் ஒரு கப்

4.நறுக்கிய கருவேப்பிலை சிறிதளவு

5.மல்லித்தழை சிறிதளவு

6.பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் இரண்டு

7.கரம் மசாலாத்தூள் கால் ஸ்பூன்

8.மிளகாய் தூள் கால் ஸ்பூன்

9.உப்பு தேவையான அளவு

10.நெய் அல்லது வெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் நீங்கள் ரோட்டு கடை முட்டை தோசை செய்வதற்கு தேவையான பொருட்களை எல்லாம் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் ஒரு கப் தோசை மாவில் சிறிதளவு உப்பை போட்டுவிட்டு அடுப்பில் தோசை கல்லை போட்டு தோசையை நல்ல முறையில் லேசாக ஊத்த வேண்டும்.

பிறகு இதன் மீது நெய் அல்லது வெண்ணையை தேய்த்து விடுங்கள். அதனை அடுத்து நீங்கள் பொடி பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை அதன் மேல் போட்டுவிட்டு, பச்சை மிளகாயை போட்டு விடுங்கள்.

இதனை அடுத்து நீங்கள் நறுக்கி வைத்திருக்கும் கருவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை போதுமான அளவு சேர்த்து விடுங்கள். இதனை உங்கள் தோசை கரண்டியால் நன்கு அழுத்தி விட வேண்டும்.

 இந்த மசாலா பொருட்கள் எல்லா பகுதிகளிலும் ஒரே அளவு பரவிய உடன் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் இரண்டு முட்டையை உடைத்து அப்படியே அதன் மீது ஊற்றி விடுங்கள். பிறகு தேவையான அளவு உப்பை சேர்த்து தோசையின் எல்லா பக்கங்களிலும் பரவும் படி முட்டையை பரப்பி விட வேண்டும்.

இதனை அடுத்து முட்டை பரவியதும் அது வேகம் வரை காத்திருக்கவும்.  பிறகு மெதுவாக எடுத்து திருப்பி போடுங்கள். திருப்பி போட்ட பிறகு சிறிதளவு வெண்ணையை மீண்டும் அதன் மீது போட்டு நன்கு வேக விட வேண்டும்.

 இரு புறமும் சிவந்த பிறகு தோசையை எடுத்து பரிமாறுங்கள். இப்போது ரோட்டு கடை ஸ்டைலில் உங்கள் வீட்டில் நீங்கள் அசத்தலான முட்டை தோசையை செய்து விட்டீர்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …