திருமணமான ரெண்டே வாரத்தில் விவாகரத்து..? இந்திரஜா கொடுத்த பதிலை பாருங்க..!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரோபோ சங்கர். இவர் துவக்கத்தில், சன் டிவியில் அசத்தப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியில், ஸ்டாண்ட் அப் காமெடி செய்யும் நபராகதான் மக்கள் மத்தியில் அறிமுகமானார்.

ரோபோ சங்கர்

ரோபோ சங்கர் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலமான நடிகர்கள் போல் மிகச் சிறப்பாக பேசுவார். அவர்களது குரலில், முக பாவனைகளை காட்டி தன்னுடைய குரலில் அவர்களை அற்புதமாக கொண்டு வந்து பேசக்கூடிய திறமையாளராக ரோபோ சங்கர் அசத்தினார். அவரது மிமிக்ரி அவருக்கு மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று கொடுத்தது.

இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்ட அவர், பலவிதமான காமெடிகளை செய்து காட்டி மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமானார்.

இந்நிலையில் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன.

அண்ணாத்த, விஸ்வாசம், கலகலப்பு 2, கருப்பசாமி குத்தகைதாரர், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், மாரி 1, மாரி 2, சிங்கப்பூர் சலூன், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர்.

ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற ரோபோ சங்கர் தொடர்ந்து காமெடி நடிப்பில் அவர் பெரிய அளவில் முன்னுக்கு வந்தார்.

மகள் இந்திரஜா

இந்நிலையில் அவரது மகள் இந்திரஜாவும், பிகில் படத்தில் கபடிக்குழுவில் ஒரு பெண்ணாக நடித்திருந்தார். விஜய்யுடன் அவர் நடித்த அந்த காட்சிகளில் பெரிய அளவில் பிரபலமானதால், இந்திரஜா தமிழ் சினிமாவில் ரோபோ சங்கர் மகள் என்று கவனிக்கப்பட்டார்.

நடிகர் ரோபோ சங்கர், நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகராக இருப்பதால், கமல் நிகழ்ச்சிகளில் அவர் தன்னை முன்னிறுத்திக் கொண்டு வருகிறார்.

பிரமாண்ட திருமணம்

இந்நிலையில் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா திருமணம், சமீபத்தில் மிகப் பிரமாண்டமாக நடந்தது. சொந்த மாமா சங்கர் என்பவரையே இந்திரஜா காதலித்து திருமணம் செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

திருமண விழாவில். சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

அந்த கோலாகலமான திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில்…

இந்த சூழலில் சமீபத்தில் திருமணமான இந்திரஜாவிடம், ஒரு ரசிகர் வில்லங்கமான கேள்வியை கேட்டிருப்பது பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கு, சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. தன்னுடைய கணவருடன் இருக்கும் அழகான புகைப்படங்களை தன்னுடைய இணைய பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் இந்திரஜா.

விரைவில் விவாகரத்து

இதனை பார்த்து ரசிகர் ஒருவர் விரைவில் விவாகரத்து என்ற கருத்து தெரிவித்திருந்தார்.

இவர்களுடைய திருமணம் நடந்தே இரண்டு வாரம்தான் ஆகிறது என்ற நிலையில், இணையவாசி ஒருவர் விவாகரத்து விரைவில் என்று கமெண்ட் செய்திருப்பதை பார்த்து கடுப்பான இந்திரஜா சங்கர், அந்த நெட்டிசனுக்கு பதில் கொடுத்து இருக்கிறார்.

அதில் அவர் கூறியதாவது, எப்படி இப்படியான மனிதர்கள் எதிர்மறையான கருத்துக்களை பயமில்லாமல் பரப்புகிறீர்கள். இதெல்லாம் உங்களுடைய பெற்றோரின் வளர்ப்பு தான்.

சீ…த்தூ என துப்ப வேண்டும்

உங்களுடைய பெற்றோரை பார்க்க வேண்டும். அவர்களை பார்த்து உங்க பிள்ளையை ரொம்ப அழகா வளர்த்திருக்கீங்க என்று சொல்லிவிட்டு சீ.. த்தூ.. என துப்ப வேண்டும் என கருத்து தெரிவித்திருக்கிறார்.

இவருடைய இந்த பதிவு, தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam