சின்னத்திரையில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்து வெள்ளித்திரையில் சக்கை போடு போடும் காமெடி நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இவர் அட்லி இயக்கத்தில் உருவான பிகில் படத்தில் பாண்டியம்மாள் என்ற கேரக்டரில் நடித்து பாராட்டுதல்களை பெற்ற மிகச்சிறந்த நடிகையாக விளங்குகிறார். இந்த படத்தை அடுத்து இவர் விருமன் படத்தில் அதிதியோடு நேர்த்தியான முறையில் நடித்திருப்பார்.
நடிகை இந்திரஜா..
இந்நிலையில் நடிகை இந்திரஜா தனது பெற்றோரின் வளர்ப்பு தம்பியான கார்த்திக்கை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடந்ததோடு மட்டுமல்லாமல் குடும்பத்தோடு ஆட்டம் பாட்டம் என கலக்கலாக நடந்து முடிந்தது.
திருமணத்தில் சிறப்பு விருந்தினராக கமலஹாசன், விஜயசேதுபதி, பார்த்திபன், பாண்டியராஜன், பிருதிவி ராஜ், கே பாக்யராஜ், ராமராஜ், தம்பி ராமையா, சுரேஷ் சக்கரவர்த்தி, மாஸ்டர் மகேந்திரன், கலா மாஸ்டர் என பலரும் கலந்து கொண்டு திருமணம் ஆன தம்பதிகளை வாழ்த்தினார்கள்.
இந்த திருமணம் நடந்து முடிந்த பிறகும் கூட இணையங்களில் அதிக அளவு சர்ச்சைகள் வெடித்ததோடு பல்வேறு பிரச்சனைகளை இந்திரஜா சந்தித்ததாக கூறியிருக்கிறார்.
என்னய்யா சொல்றீங்க..
இதற்குக் காரணம் திருமணத்திற்கு முன்பு ரோபோ சங்கரின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததோடு என்ன ஆகுமோ என்று குடும்பமே பயந்திருந்த நிலையில் சோசியல் மீடியாக்களில் அவருடைய தீய பழக்கம் பற்றி பலரும் பல்வேறு வகைகளில் எழுதியதோடு மட்டுமல்லாமல் பல்வேறு சந்தேகங்களையும் கிளப்பியிருந்தார்கள்.
எனினும் எல்லாவற்றிற்கும் தகுந்த பதில்களை எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் தந்ததை அடுத்து அது போன்ற பேச்சுக்கள் சற்று தனிந்தது. இதை அடுத்து என் திருமண நிச்சயதார்த்தத்தில் அப்பாவிற்கு உதட்டில் முத்தம் கொடுத்ததை அடுத்து அது பற்றியும் கடுமையான விமர்சனங்கள் வெளி வந்தது.
இதைத்தொடர்ந்து என்னுடைய திருமண ரிசப்ஷனில் அம்மாவும் என் கணவரும் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் போது கன்னத்தில் முத்தம் கொடுக்க சென்ற நிலையில் அம்மா திரும்பியதால் உதட்டில் முத்தம் தந்தது போல் ஆகிவிட்டது. அக்காவுக்கு இப்படி முத்தம் கொடுக்கலாமா? இது அநாகரீகமா? கலாச்சாரமா? என்பது போல பல கமெண்ட்டுகள் வந்தது.
அதுக்குள்ள விவாகரத்தா?
இதையெல்லாம் விட ஒரு படி மேலே கணவருடன் நான் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து கமெண்ட்ஸ் செக்ஷனில் விரைவில் விவாகரத்து என்பது போன்ற வார்த்தைகளை போட்டு பதிவிட்டார்கள்.
திருமணம் ஆன ஒரே மாதத்தில் இப்ப விவாகரத்து கேட்கிறார்கள் என்பது போன்ற விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் இருந்தாலும் சில சமயம் அந்த கமாண்டுகளை பார்க்கும் போது மனதில் வருத்தம் ஏற்படுகிறது.
இதனை எப்படி அவர்களால் கேட்க முடிகிறது. உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு இப்படி நடந்தால் நீங்கள் இப்படிப்பட்ட கேள்விகளை எல்லாம் கேட்பீர்களா? கொஞ்சமாவது நினைத்துப் பார்க்க மனது இல்லையா? என்ற கேள்வியை எழுப்பியதோடு இதற்கு உங்களை சொல்லி தப்பில்லை.
உங்களுடைய வளர்ப்பு அப்படி உள்ளது என்று சோகமாக இந்திரஜா கூறி இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் இது போல உங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரைப் பார்த்து நான் நாலு வார்த்தை கேட்க வேண்டும் என நடிகை இந்திரஜா உருக்கமாக பேசிய பேச்சானது இணையத்தில் தற்போது வைரலாகி வருவதோடு இப்படியெல்லாம் இந்திரஜாவை பேசியது தவறு என்பதை சுட்டிக் காட்டும் படி உள்ளது.
இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு இந்திரஜா உருக்கமாக விடுத்த பேச்சில் உண்மை உள்ளது.
யாரையும் ஆழம் தெரியாமல் பேசுவது தவறு என்பதை இனி மேலாவது ரசிகர்கள் உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்வது அனைவருக்கும் நன்மை தரும் என பலரும் கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.