“ரோஜா சீரியல் புகழ் பிரியங்கா நல்காரி..!” – யூஸ் பண்ணும் மேக்கப் டிப்ஸ்..!!

சன் டிவியில் டிஆர்பி ரேட்டை எதிர வைத்த சீரியல்களின் வரிசையில் ஒன்றாக ரோஜா சீரியல் இருந்தது அனைவருக்கும் நன்கு தெரியும். அந்த சீரியலில் ரோஜாவாக நடித்த பிரியங்கா நல்காரி

தன்னை அழகாக வெளிப்படுத்தி, மக்கள் மனதில் ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கிறார் என்றார் அதற்கு காரணம் அவர் பயன்படுத்திய மேக்கப் என்று கூறலாம்.

அப்படி ரோஜா சீரியல் நடிகையான பிரியங்கா பயன்படுத்திய மேக்கப் டிப்ஸ் பற்றி இப்போது நாம் தெரிந்து கொண்டு அதை ஃபாலோ செய்வதன் மூலம் நம்மையும் ஒரு அழகியாக அனைவருக்கும் காட்ட முடியும்.

ரோஜா சீரியல் நாயகியின் மேக்கப் டிப்ஸ்

ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா எப்போதுமே முகத்திற்கு க்ளென்சர் வகையான பேஷ் வாஷை மட்டுமே பயன்படுத்துகிறார். இதனால் தான் அவளது சருமம் பளபளப்பாக இருப்பதாகவும், தினமும் காலை வெயிலில் 10 நிமிடம் நிற்பதாகவும் அவர் ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார்.

முகத்திற்கு மேட் டைப் மேக்கப் பொருட்களை மட்டுமே இவர் பயன்படுத்துகிறார். லிப்ஸ்டிக் தொடங்கி ஃபவுண்டேஷன் வரை காஜல் எல்லாவற்றுக்குமே இவர் மேட் பினிஷிங் உள்ள மேக்கப் பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் அதிகளவு புடவைகளை மட்டுமே தேர்வு செய்து உடுத்தக்கூடிய இவர் பன்சாரி சில்க்ஸ், கலம் கரை புடவைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அசத்தலாக அணிகிறார்.

சூட்டிங் முடிந்த பின்பு இவரது மேக்கப்பை நீக்க  தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்துவதாகவும் அது போல் மேக்கப்பை நீக்கியவுடன் சரும பராமரிப்பு முறைகளை கண்டிப்பாக செய்துவிட்டு தான் உறங்கச் செல்வாராம்.

சூட்டிங்க்கு செல்வது என்றாலும் கூட அவர் வீட்டு உணவை மட்டுமே விரும்பி சாப்பிடுவார். அங்கும் இவர் வீட்டில் சமைத்த உணவுகளையே கொண்டு செல்கிறார். கடைகளில் வாங்கி அதிக அளவு உணவுகளை சாப்பிடுவது இல்லை. தர்பூசணி பழத்தை விரும்பி சாப்பிடுவதாகவும் தெரிவித்திருக்கிறார்

எனவே நீங்களும் அவர் பயன்படுத்துவதைப் போல அந்த மேக்கப் பொருட்களை வாங்கி பயன்படுத்தினால் நிச்சயம் அழகில் நீங்களும் ஜொலிக்கலாம் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …