அழகுக் கலையில் தக்காளி.

தக்காளி சமையல் மட்டுமல்ல அழகு கலையிலும் மிகச் சிறப்பான பங்கினை வகிக்கிறது.மேலும் இதில் உள்ள அமிலத்தன்மை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளால் சரும ஆரோக்கியம் மேம்படுத்தப்பட்டு, பல்வேறு பிரச்சனைகளில் இருந்து உடனடி தீர்வு கிடைக்கிறது.

தக்காளியைக் கொண்டு நாம் முகத்தை பளபளப்பாக மிக எளிதில் மாற்ற முடியும் அப்படி தக்காளியை பயன்படுத்தினால் என்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பதை இனிக் காணலாம்.

அழகியலில் தக்காளி

தக்காளியில் இருக்கும் லைகோபீன் உடல் நலத்திற்கு மிகவும் நன்மையளிக்கக் கூடியது. அதே லைகோபின் உங்கள் சருமம் முதிர்ச்சியடையாமல் காக்கிறது.

முகத்தில் சுருக்கம் விழாமல் தடுக்கிறது. மேலும் இது தோல்களை பளபளக்க செய்கிறது. பழுத்த தக்காளியை நன்கு பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்.

கழுத்தில் கறுப்புக்கயிறு கட்டியது போல்  கருவளையம் தோன்றயிருந்தால் இதனை தக்காளி பேஸ்ட் கொண்டு விரட்டி விடலாம்.

தக்காளி குளிர்ச்சியானது. இதனுடன் வெள்ளரிச்சாறை சம அளவில் எடுத்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவ வேண்டும். தொடர்ந்து  செய்து வந்தால், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.

முகத்தில் மேடு பள்ளங்கள் அதிகம் இருக்கும். இது ஒருவரின் முகத்தை மிகவும் அசிங்கமாக வெளிக்காட்டும். இதனைத் தவிர்க்க, தினமும் தக்காளியை துண்டாக்கி முகத்தில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் விரிவடைந்த சருமத் துளைகள் சுருங்கும்.

 வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும், சோப் பயன்படுத்தாமல், ஒரு டேபிள் ஸ்பூன் தக்காளி சாற்றுடன் எலுமிச்சை சாறு சேர்ந்து கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால், சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீங்கும் சருமம் ஜொலி ஜொலிக்கும். 

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …