” உங்கள் முகம் பேபி பிங்காக ஜொலிக்க..! – நான்கு பன்னீர் ரோஸ் இருந்தா போதும்..!!

இன்று இருக்கும் எல்லா பெண்களுமே தங்கள் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் விருப்பம் காட்டி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் முகப்பிரகாசமாக இருப்பதற்காக பியூட்டி பார்லருக்கு சென்று எண்ணற்ற பணத்தை செலவு செய்து வருகிறார்கள்.

அப்படி இருக்கும் பெண்கள் எந்த கோடையில் அவர்களது முகத்தை பராமரிக்க எளிய சுலபமான வழியை இந்த கட்டுரையில் கூறியிருக்கிறோம். இதை நீங்கள் நன்கு படித்து புரிந்து ஃபாலோ செய்வதின் மூலம் உங்கள் முகம் பளிச்சென்று பிரகாசமாகும்.

இனி வரக்கூடிய கோடை காலத்தில் வெயிலில் தாக்கத்திலிருந்து உங்கள் முகத்தை ஜொலி ஜொலிப்பாக வைத்துக்கொள்ள இந்த பன்னீர் ரோஜா -வை பேஸ் பேக்காக பயன்படுத்தினால் போதும்.

இது சூரிய தாக்குதல்களால் ஏற்படக்கூடிய கருமை நிறத்தை தடுத்து புற ஊதா கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க பன்னீர் ரோஸ் பேஸ் பேக்கை பயன்படுத்தினால் நீங்கள் எப்போதும் வெள்ளையாக ஜொலிக்கலாம்.

பன்னீர் ரோஸ் பேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்

1.பன்னீர் ரோஸ் நான்கு

2.ரோஸ் வாட்டர் இரண்டு டீஸ்பூன்

3.சிறிதளவு உரைத்த சந்தனம்

பன்னீர் ரோஸை நீங்கள் ரோஸ் வாட்டர் உடன் கலந்து மைய அரைத்துக் கொள்ளுங்கள்ஶ்ரீ இதனோடு உரைத்து வைத்திருக்கும் சந்தனத்தின் கலவையும் சேர்த்து ஒன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.

இதனை அடுத்து குளிர்ச்சியாக இருக்கக்கூடிய இந்த பேஸ் பேக்கை உங்கள் முகத்தில் நன்கு அப்ளை செய்து கொள்ளவும். இது காயும் வரை காத்திருக்கவும்.

பின் அரை மணி நேரம் கழித்த பிறகு குளிர்ந்த நீரால் உங்கள் முகத்தை கழுவி விடுங்கள் இதனை நீங்கள் தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்வதின் மூலம் பைசா செலவில்லாமல் உங்கள் முகத்தை அழகை பராமரிக்கலாம்.

மேலும் பார்ப்பதற்கு எண்ணெய் பிசுக்கு இல்லாமல் உங்கள் முகம் ஜொலி ஜொலிக்க இந்த பன்னீர் ரோஸ் பேஸ் பேக் உறுதுணையாக இருக்கும்.

வெயிலின் தாக்குதல்களில் இருந்து உங்களை பாதுகாக்கும் எந்த பன்னீர் ரோஸ் பேக்கை உங்கள் வீட்டிலேயே நீங்கள் தயார் செய்து உங்கள் முகத்திற்கு போட்டு உரிய பலனை பெறுங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …