வீட்டில் தொட்டிகளில் வளர்க்கும் ரோஜா செடிகளை பராமரிக்க கூடிய எளிய டிப்ஸ்..!

பொதுவாகவே பூச்செடிகளை பராமரிப்பது என்பது ஒரு முக்கியமான பணியாகவே இருக்கும். அதில் நாம் சரியாக பயன்படுத்தினால் மட்டுமே பூக்களை நாம் எளிதில் அதிக அளவு பெற முடியும். அந்த வரிசையில் இன்று ரோஜா பூ செடிகளை நமது வீட்டில் தொட்டி செடிகளாக வளர்க்கும் போது எப்படி  பராமரித்தால் அதிகளவு பூக்களை பெற முடியும் என்பதை பார்க்கலாம்.

பொதுவாகவே ரோஜா பூவை பிடிக்காதவர்களே இல்லை என்று கூறக்கூடிய அளவுக்கு ரோஜா பூவின் மேல் ஆசைப்படுபவர்கள். அதிலும் நம் வீட்டில் பூக்கும் ரோசினை பறித்து வைத்தால் அலாதி சுகமாக இருக்கும்.

அப்படிப்பட்ட ரோஜா செடிகளை நாம் நர்சரிகளில் இருந்து வாங்கி வந்து தொட்டியில் வைத்து தினமும் நீர் ஊற்றி வைத்தாலும் சில தினங்களில் அவை வாடி கருகிவிடும்.

இதனைத் தடுத்து எளிய முறையில் மிக நேர்த்தியாக  ரோஜா செடிகளை வளர்த்து பூக்களை எப்படி பெறலாம் என்பது பற்றி பலரும் கனவு கண்டு வருகிறார்கள்.

பூக்களை அதிகளவு பெறுவதற்கான வழிகள் :

ரோஜா செடியை தொட்டியிலோ அல்லது மண்ணிலோ நடவு செய்வதற்கு முன்பு செடியின் உயரத்தை விட ஒன்றரை பங்கு ஆழமாகவும் அதைவிட இரண்டு பங்கு அகலத்தையும் விட்டு இந்த செடியை நட வேண்டும்.

அவ்வாறு நடுவதற்கு முன்பு ரோஜா செடியின் அடியில் உரத்தை ஈட்டு அதன் மேல் இயற்கை எருக்களை போட்டு செம்மண் கலவையால் அதை மூடி நன்கு நிரப்ப வேண்டும்.

அது மட்டுமல்லாமல் உரத்தை வேர் வரக்கூடிய பகுதியிலிருந்து சற்று தள்ளி, சிறிதளவு மண்ணின் மேல் பகுதியிலும் போட வேண்டும். அது போல் ரோஜா செடியை தொட்டிக்குள் வைக்கும் போது ரோஜா கோலில் இருக்கக்கூடிய வேர்களில் எந்த விதமான டேமேஜும் ஆகாமல் பக்குவமாக வைக்க வேண்டும்.

அப்படி வைக்கும்போது தான் புதிய வேர்கள் உருவாகி அந்த மண்ணை ஏற்றுக்கொண்டு வளரும் ரோஜா செடியின் பக்கத்தில் ஈரம் அதிக அளவு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். மேலும் சிறிதளவு ஈரம் இருப்பதற்காக தேங்காய் நார்களை சிறிது சிறிதாக வெட்டி அந்த பகுதியில் போட்டுவிட்டு சிறிதளவு நீரை விட்டால் போதும்.

 ரோஜா செடிகளை பூச்சிகள் தாக்காமல் இருக்க சிறிதளவு ஷாம்பு அல்லது விம்வாஸ் ஆகிய திரவத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து இலைகளின் மேல் தெளிக்கலாம்.

 பழுத்த இலைகள் தானாக விழுந்து விடும் என்று காத்திருக்காமல் அவ்வப்போது கவாத்து எடுத்து விடுவதின் மூலம்  சீக்கிரம் வளரும்.

 தொட்டி செடியாக இருக்கும் பட்சத்தில் குறைந்தது 6 மணி நேரம் தொட்டி வெயிலில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.மேலும் ஈரப்பதத்தை உறுதி செய்யுங்கள்.

 செடியின் மேல் சில சமயங்கள் நீரை அப்படியே தெளிக்கலாம். குளிர்காலங்களில் ஐந்து முதல் சிறிதளவு நீர் ஊற்றினால் போதுமானது. இவற்றை நீங்கள் ஃபாலோ செய்யும் போது உங்களது ரோஜா செடி பூத்துக் குலுங்கும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …