சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றிய கண்ணம்மா-வா இது..? – கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..!

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்தவர் ரோஷினி ஹரிப்பிரியன் ( Roshini Harpriyan ) . இதில் கேரக்டர் ரோல் செய்ததால், இவர் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றார்.தமிழ் டிவி சீரியல்களில் குடும்ப கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அதுவும், கணவன்– மனைவி இடையிலான பிரச்னைகளை மையப்படுத்தி எடுக்கப்படும் கதைகளுக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

Image Source : instagram.com/roshniharipriyan/

அந்த வகையில், விஜய் டிவியில் மக்களை அதிகளவில் கவர்ந்த சீரியல், பாரதி கண்ணம்மா. இதில், டாக்டரான பாரதி என்ற பெயர் கொண்ட கணவர், கண்ணம்மா என்கிற தனது மனைவி மீது சந்தேகப்படுவார். தனக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளும், தன்னுடையது அல்ல என்ற பாரதியின் சந்தேகப்பட, அதனால் ஏற்பட்ட பிரச்னையில் கணவன் – மனைவி இருவரும் பிரிய நேரிடும். கணவனை பிரிந்த கண்ணம்மா, தனது குழந்தைகளை பல்வேறு சிரமங்களுக்கு இடையில் காப்பாற்றி, படிக்க வைப்பார்.

Image Source : instagram.com/roshniharipriyan/

இதில் ஒரு பெண் குழந்தை, தந்தையின் வீட்டிலேயே வளர்ப்பு மகளாக இருக்கும் என்பதும்,இந்த சீரியலில் கூடுதல் டிவிஸ்ட் ஆக இருந்தது. டாக்டர் பாரதி மீது ஒரு தலை காதல் கொண்ட மற்றொரு பெண் டாக்டர் என்பது, சீரியலின் இறுதி கட்டத்தில் தெரிய வரும். இதில், சீரியலின் ஒருபகுதி வரை, கண்ணம்மா கேரக்டரில் நடித்தது ரோஷினி ஹரிப்பிரியன்தான்.

அவரது நடிப்பு, இந்த சீரியலுக்கு முக்கிய பலமாக இருந்தது. கணவர் பாரதியிடம் தன்னை குற்றமற்றவள் என நிரூபிக்க ஒரு மனைவியாக கண்ணம்மா போராடும் காட்சிகளும், பெண் டாக்டரின் சதியால், மனைவி கண்ணம்மாவை நம்பாமல் டாக்டர் பாரதி, வேதனைப்பட்டு சண்டையிடும் காட்சிகளும், இந்த சீரியலை தினமும் தவறாமல் பார்க்கும்படி ரசிகர்களை தன் வசப்படுத்தியது.

Image Source : instagram.com/roshniharipriyan/

சினிமா நடிகையரை போலவே, டிவி சீரியல் நடிகையரும் மக்கள் மத்தியில் நல்ல பேமஸ் ஆகி விடுகின்றனர். போதாக்குறைக்கு சோஷியல் மீடியாவில் அவர்களை பற்றிய தகவல்களை அடிக்கடி அப்டேட் செய்யப்படுவதால், அவர்கள் சீரியலில் நடிக்காத போதும், மக்கள் மத்தியில் அதே இமேஜ் உடன் வலம் வருகின்றனர்.

Image Source : instagram.com/roshniharipriyan/

அந்த வகையில், சமூக வலைதள பக்கங்களில் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என ஆக்டிவ்வாக இருக்கும் அம்மணி ரோஷினி ஹரிப்பிரியன் அவ்வப்போது தனது புகைப்படங்களை பரவ விடுகிறார். அதன்படி, சேலை கட்டிய ரோஷினி ஹரிப்பிரியன் கிளாமரான புகைப்படங்கள், வெகு வேகமாக பரவி வருகின்றன.

Image Source : instagram.com/roshniharipriyan/

பாரதி கண்ணம்மா சீரியலில் புரட்சிப்பெண்ணாக, சந்தேகப்படும் கணவனை எதிர்த்து, தன் பெண் குழந்தைகளை காப்பாற்ற போராடும் ஒரு நாயகியாக நடித்தவரா இவர் என, ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு அம்மணி, தனது புகைப்படங்களில் உடை விஷயத்தில் தாராளம் காட்டுகிறார். மாடர்ன் டிரஸ்சிலும் மப்பு ஏற்றுகிறார். நடிப்பு வேறு, வாழ்க்கை வேறு என்பதை இந்த பதிவுகளின் வாயிலாக, சொல்லாமல் சொல்கிறாரோ ரோஷினி ஹரிப்பிரியன் என, ரசிகர்கள் கமெண்ட்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …