காட்சிக்கு காட்சி Goosebumps..! – RRR படம் எப்படி இருக்கு..! – திரைவிமர்சனம்..!

பாகுபலி 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். பிரபல தெலுங்கு நடிகர்களான ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் இப்படத்தில் நாயகர்களாக நடித்துள்ளனர்.

மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மாரிஸ், சமுத்திரக்கனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.சுதந்திர போராட்ட வீரர்களான சீதாராம ராஜு மற்றும் கொமராம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இப்படம் குறித்த டுவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..

ஆர்.ஆர்.ஆர் படத்தை டென்மார்க்கில் பார்த்ததாகவும், படம் சிறப்பாக இருந்ததாகவும், ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இரண்டு சூப்பர் ஹீரோக்களின் ரசிகர்களின் இப்படம் விருந்தாக இருக்கும் எனவும் நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

ஆர்.ஆர்.ஆர் படம் தமிழ்நாடு மற்றும் கேரள ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும். இந்தி மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு இது ஒரு ஆவரேஜ் படமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது மிகப்பெரிய ஹிட்டாக வாய்ப்பில்லை எனவும், பாகுபலி ரேஞ்சுக்கு இல்லை எனவும் பதிவிட்டுள்ளார். அவ்ளோ சீன் இல்லப்பா என அந்த டுவிட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆர்.ஆர்.ஆர் படத்தின் இண்டர்வல் சீன் சிறப்பான ஒன்றாக இருந்ததாகவும், இதுவரை இந்திய சினிமாவில் அப்படி ஒரு காட்சியை பார்த்ததில்லை என பதிவிட்டுள்ளார். காட்சிகளைப் பொருத்தவரை இது ராஜமவுலியின் மாஸ்டர் கிளாஸ் என்றும் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரணின் நடிப்பு அட்டகாசம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அடக்கடவுளே… ராஜமவுலியின் முதல் ஃபிளாப் இது. இப்படத்தை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் வந்து பார்ப்பது கடினம். 2-ம் பாதி எதிர்பார்த்த அளவு இல்லை என பதிவிட்டுள்ளார்.

என்ன கதை..

1920-களில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களான ராமராஜு, பீம் ஆகியோர் வாழ்க்கை கதையை முழுக்க முழுக்க கற்பனையில் ராஜமவுலியின் கிராபிக்ஸ் கண்களில் விரித்துக் காட்டும் திரைப்படம் RRR.

காட்சிக்கு காட்சி பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என ராஜமௌலி எடுத்துக்கொண்ட முயற்சி, இந்த திரைப்படம் இதுவரை இந்திய சினிமா பார்த்திடாத பிரம்மாண்ட திரைப்படமாக ரசிகர்களின் கண்களுக்கு தெரிகிறது.

ராம்சரண் நெருப்பு என்றும் ஜூனியர் என்டிஆர் நீர் என்றும் படத்தில் எடுத்துக்கொண்ட தீமை, படம் முழுக்க நேர்த்தியுடன் கையாண்டுள்ளது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு புதுவித அனுபவமாக அமைந்துள்ளது.

குறிப்பாக நீரும் நெருப்பும் மோதிக்கொள்ளும் இடைவேளை சண்டைக்காட்சி இந்திய சினிமாவின் மைல்கல் காட்சியாக அமையும் வகையில் ஒட்டுமொத்த படக்குழுவும் உழைப்பை கொட்டி உள்ளது.

காட்சிக்கு காட்சி GooseBumps..

ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இடையே நட்பு வளரும் காட்சிகளும் நாட்டு குத்து பாடலும் தெலுங்கு படங்களுக்கே உரிய மசாலா. படத்தின் முதல் பாதி முழுவதும் ஜூனியர் என்டிஆர் ஆதிக்கம் செலுத்தும் வகையிலும் இரண்டாம் பாதியில் ராம்சரண் ஆதிக்கம் செலுத்தும் வகையிலும் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதால், இரண்டு தரப்பு ரசிகர்களையும் ராஜமௌலி சமரசம் செய்ய முயற்சி செய்துள்ளார்.

என்றாலும், படத்தின் முடிவில் ராம் சரணுக்கே கூடுதல் ரசிகர் கூட்டம் உருவாகும் வகையில், திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் நீளம் மூன்று மணி நேரத்தை தாண்டி இருந்தாலும் படத்தின் ஒவ்வொரு காட்சியும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளதால், படம் பார்க்கும் ரசிகர்களுக்கு காட்சிக்கு காட்சி GooseBumps உணர்வு ஏற்படுவதால் படத்தின் நீளம் ஒரு பொருட்டாகவே அமையாதது ராஜமௌலியின் மேஜிக்.

ஃபுல் பைசா வசூல்..

அலியா பட் வாம்மா மின்னல் என தோன்றி மறைகிறார். பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை உருவாக்கி விட்டு அதனை கடந்து மற்றொரு திரைப்படத்தை எடுத்து விட முடியுமா என்ற கேள்விக்கு பதில் சொல்லும் முயற்சியாக அல்லாமல் மற்றுமொரு பிரம்மாண்ட படைப்பாக RRR திரைப்படத்தை உருவாக்கி ரசிகர்களை குதுகலம் அடையச் செய்துள்ளார் இயக்குனர் ராஜமௌலி.

ஒளிப்பதிவாளர் செந்தில்குமாரின் பங்களிப்பும், இசையமைப்பாளர் கீரவாணியின் உழைப்பும் காட்சிக்கு காட்சி படத்தை மெருகேற்ற பிரம்மாண்டத்தின் புதிய மைல்கல் என ஒட்டுமொத்தமாக மீண்டும் தன் முத்திரையை வலுவாக பதித்துள்ளார் ராஜமவுலி.

படத்தில் வரும் சண்டைக்காட்சிகள் நம்பும்படியாக இல்லை என குறை என கூற முற்பட்டாலும் அதனை நம்பும் வகையில் கிராபிக்ஸ் அமைத்தும், இசை கோர்த்தும் சரி செய்துள்ளனர். ஒட்டுமொத்தத்தில் RRR ஃபுல் பைசா வசூல்!

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …