சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் ரஜினி என்பது இன்று உள்ள தலைமுறை வரை எல்லா குழந்தைகளும் சொல்லும். அதுபோல அவர்களுக்கு பிடித்த நடிகர் யார் எனக்கேட்ட தற்போதைய குழந்தைகள் எல்லோருமே தளபதி விஜய் அவர்களின் பெயர்களை தான் கூறுவார்கள்.
அந்த அளவு சிறு பிள்ளைகள் முதல் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்திருக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படமானது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாக்கப்பட்ட வரும் நிலையில் தற்போது இதன் படப்பிடிப்புகள் ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில் பொங்கல் அன்று இந்த திரைப்படம் திரைக்கு வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் கடந்த இருபதாம் தேதி சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்களை தளபதி விஜய் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்திருக்கிறார்.
இந்த சந்திப்பு சந்திப்பின் காரணம் என்ன அரசியல் நிமித்தமான சந்திப்பா அல்லது பீஸ்ட் தோல்விக்கு பிறகு இவர் ரசிகர்களை சந்திப்பது வாரிசு படத்தை வெற்றி அடைய செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் உள்ளதா என்று தெரியாத நிலையில் இந்த சந்திப்பு பற்றி பலரும் பேசிக் வருகிறார்கள்.
மேலும் சந்திப்புக்கு பின் தளபதி விஜய் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்றார். இவர் இந்த நிகழ்ச்சிக்காக வந்திருந்த காரில் கண்ணாடியில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிய காரணத்திற்காக தற்போது போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திக்காகவும் இவருக்கு ரூபாய் 500 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
பனையூரில் இவர் ரசிகர்களை சந்தித்த பிறகு அங்கிருந்து புறப்பட்ட காரை ரசிகர்கள் பலரும் ஓட ஓட பின் தொடர்ந்து இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் பின் தொடர்ந்த வந்த சில ரசிகர்கள் அதை வீடியோவும் எடுத்திருக்கிறார்கள். அப்போது காரில் சென்ற வீடியோ வெளியாகி வைரலான நிலையில் விஜய் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி இருப்பது பற்றி பலரும் கேள்வி எழுப்பினர்.
இதனை உடனடியாக கவனித்த காவல்துறையானது விஜய் பெயரில் வழக்கு பதிவு செய்து ரூபாய் 500 அபராதமும் விதித்து சென்னை போக்குவரத்து போலீஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது இது பாராட்டுக்கு உரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.